பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 3星9 சருக்கரை. உப்பு சேர்க்கக் கூடாது என்று சொல்வதைப் பார்த்திருக்கின்றோம். எவ்வளவு கொடுமை இது! ஊழ் அல்லது விதியைப்பற்றி நீதி நூல்கள் உணர்த்து வதை விட, காவியங்கள் உணர்த்தும் முறை கற்டோருக் இனிமை பயப்பது; நீதி நூல்கள் உண்மையை உணர்த்து வது மருந்து மாத்திரைகளை விழுங்குவது போன்றது. இதே உண்மை காவியத்தில் உணர்த்தப் படும்போது சத் துணவு உண்பது போன்றது. உண்மைகளை உணர்த் துவதுபற்றி வடமொழிவாணர்கள் கூறுவது சிந்திக்கத் தக்கது. தலைவன் ஏவலாளர்க்குக் கூறுதல் போன்றவை அற நூல்கள் என்றும், நண்பர் ஒருவருக்கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பவை போன்றவை காவியங்கள் என்றும் ஒருவித பாகுபாடுகள் செய்து விளக்கியுள்ளனர். இல்வாழ்க் கையில் சொற்களை விட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும், சொற்களால் உணர்த்துவதை விடக் குறிப்பால் உணர்த்துவதே மிகுதி என்பதும் நாம் அறிந் தவை. இக்காரணத்தால்தான் சில வரிகளாலான அகத் துறைச் சங்கப் பாடல்கள் உணர்ச்சியைக் கொட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இத்தகைய உணர்ச்சிதான் காவியங்களிலும் அமைந்து கிடக்கின்றது. ஒழுக்கம், அறம் முதலியவற்றை அதிகமாகச் சொற்களால் கூறி வற்புறுத்தாமல் கற்பனையதுபவத்தின் வாயிலாக அப்பாடல்கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் ஆரா அமுதமாக அமைந்து விடுகின்றன. காவியங்களில் உண்மைகள் அமையும் முறை சிலவற்றை முன்னர் காட்டினேன். மேலும் சிலவற்றைக் ஈண்டுக் காண்போம். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும்