பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் முறைமை 3.21 இதிலிருந்து நிகழ்ச்சிகளை விதி எவ்வளவு வேகமதுத் தள்ளிக் கொண்டு செல்கின்றது என்பதை நாம அறிகின் றோம். திருதராட்டிரன் அழைப்பின்பேரில் தீங்கதனைக் கருதாத தருமக் கோமான் தன் தம்பிமாரோடும் பாஞ் சாலர் விளக்கினோடும் திருநகர்விட்டு அகல்கின்றான் தியோர் ஊர்க்கு. எப்படிச் செல்கின்றான் என்பதைப் பாரதி நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே' என்று கூறுவான். தொடர்ந்து, நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம். நழுவிவிழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்: வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்: கிரிவகுத்த ஒடையிலே மிதந்து செல்லும், கீழ்மேலாம், மேல்கீழாம்; கிழக்கு மேற்காம்; புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப் போற்றிடுவார், விதிவகுத்த போழ்தின் அன்றே.” என்று தன் கூற்றாகவே கூறுவான். ஒருவர் வாழ்க்கையில், அல்லது ஒருநாட்டில் விதி புகுந்து விளையாடுகையில் ஏற் படும் விளைவுகளைப் பாரதி தம் கற்பனையில் கண்டு நமக்குக் காட்டுகின்றான். சுமார் 200 ஆண்டுகளாக நம் நாடு அந்நியர் ஆட்சியிலிருந்தது. அக்காலத்தில் நாம் நன்மைகளையும் அநுபவித்தோம்; கேடுகளும் நம்மை வந்த டைந்தன. நம்மை ஆண்ட நம் முன்னோர் செய்த வினையின் பயனே நம் நாடு நம் கையை விட்டுப்போயிற்று. அங்ங்ணமே அந்நியர் செய்த வினையின் பயனே திரும்பவும் நம் நாடு நம் கைக்கு வந்தது. இப்பொழுது நம்மவர் மக்க ளாட்சி முறை என்ற போர்வையில் நடத்தும் ஆட்சி முறையில் நடைபெறும் முறைகேடுகளால் துன்பத்தை அநுபவிக்கின்றோம். நன்மைகளையும் நிறைய அநுபவிக் 41. பா.ச : 146. தி. இ. அ-21