பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கத்தான் செய்கின்றோம். ஆட்சி முறையில் இருப்பவர்கள் அடிக்கடி ஆன்மப் பரிசோதனைகள் செய்து குறைகளைத் தவிர்த்துக் கொண்டால் மக்களாகிய நாம் இன்னும் பல நன்மைகளை அடையலாம். ஆனால் 1987 டிசம்பர் 28ஆம் நாள் சட்டமன்றப்பேரவையில் நடைபெற்ற முறை கேடுகள், அட்டூழியங்கள் இவை திரும்பவும் நடைபெறாமல் இருக்க முயல வேண்டும். இவற்றிற்குரிய காரணங்களை விசாரணையால் கண்டறிய முடியாது. இவற்றில் பங்கு கொண்ட பொறுப்பிலுள்ளவர்களின் மனச்சான்று ஒன்று மட்டுமே உண்மையை அறியும். ஆனால் அன்று நடைபெற்ற நாடகத்தை நேரில் கண்டவர்கள், தொலை காட்சி மூலம் பார்த்தவர்கள் நாம் நம்மை ஆள்வதற்குப் பக்குவப்படவில்லை என்றுதான் நினைக்கின்றார்கள். அந்த வினைப் பயனே நாம் இன்று அநுபவிக்கும் அவமானம். நிற்க. அன்று உலகம் கேட்டிராத முறையில் திருதராட் டிரன் அவையில் அக்கிரமங்கள் நடைபெற்றன. அறத் திற்கே நாயகனாக விளங்கிய தருமன் குதில் இறங்கிய தவறே இவை நடைபெறுவதற்குக் காரணமாகின்றன. துரியோதனனையும் துச்சாதனனையும் குறை கூறிப் பயன் இல்லை. தருமன் செய்த தவற்றுக்கு சபையில் பாண்ட வர்கள் சரியான பரிசு பெற்றனர்! பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!” என்று திரெளபதியின் வாயில் வைத்துச் சொன்னான் கவிஞன். அன்று கூட (28-12.87) சபாநாயகரின் கையில் திருக்குறள் இருக்கத் தான் செய்தது. மூன்று முறையிலும் சில குறள்களைப் படித்துக்கொண்டுதான் சட்டமன்ற இருக்கையில் அமர்ந் தார். பலன், சாத்தான் வேதம் ஒதுவது போலாயிற்று. இப்போது அவதிப் படுபவர்கள் மக்கள். வாக்களித்த பெரு மக்களல்லவா? வினையை விதைத்தவர்கள் வினையைத் தானே அநுபவிக்க வேண்டும். அதுபவிக்கின்றோம்: நன்றாக அதுபவிக்கின்றோம்.