பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 323 திருதராட்டிரன் சபையில் நடைபெற்ற அக்கிரமங் களைப் பொறுக்க முடியாமல் எதிர்த்துப் பேசினவன் வீமன் ஒருவனே. ஏனைய கேள்வி பல உடையோர், கேடிலா நல்லிசையோர், வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதி யர்கள்...” சபையினோர் வீற்றிருந்தார்! வீடுமன், துரோணன், கிருபன், விதுரன் முதலியோர் கண்மூடி மெளனிகளாய் வீற்றிருந்தார்கள்! வீமன் மட்டிலும், இது பொறுப்ப தில்லை, தம்பி! எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடு வோம் ? என்று குமுறி எழுகின்றான். இப்படி எழுந்த அண்ணனை அருச்சுனன் அடக்குகின்றான். அறம் உறைக்கின்றான் பின்னால் பரந்தாமனிடம் கீதோபதேசம் கேட்கப் போகும் பார்த்தன், 'தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்: தருமம் மறுபடி வெல்லும்’ எனும் இயற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் - வழிதேடி விதி.இந்தச் செய்கை செய்தான்; கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று கட்டுண்டோம்,பொறுத்திருப்போம் காலம்மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்: ததுஉண்டு காண்டிவம் அதன்பேர்' என்றான்.' இங்கு அருச்சுனன் வாயிலாக விதியின் ஆற்றல் உணர்த்தப் பெறுகின்றது. எல்லாம் அறிந்த கண்ணன் இதனை அறி யானா? வினையைக் கூட்டுவிப்பவன் அவன் தானே. இன்னும் எத்தனையோ பேர் எத்தனையோ முறைகளில் تمتعته متحي 42. பா.ச : 281. 43. டிெ : 283.