பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32垒 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வினைகளை அநுபவிக்க வேண்டியவர்களாக உள்ளனர். நல்வினைகள் புரிவோருக்கு நல்வினைகளை ஆற்றவும், தீவினைகள் புரிவோருக்கு தீவினைகள் ஆற்றவும் வாய்ப்புகள் தரவேண்டும். துரியோதனனை நாட்டில் வைத்துத் தீவினைகள் புரியவும், பாண்டவர்களைக் காட் டில் வைத்து ஞானியர்களோடு கூட்டுறவு ஏற்படுத்தி: ஞானத்தை வளர்க்கவும் வாய்ப்புகள் தருவதற்காக அவர்கள் விஷயத்தில் அதிகமாகத் தலையிடாமல் இருந் தான் கண்ணன் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. குடியாட்சியாயினும் முடியாட்சியாயினும் பொது வாழ்வின் நன்மையைக் கருதி நெறி பிறழாத முறைமையைக் கடைப் பிடிக்க வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந் தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உடையவராக இருந்தாலும் அவர்களைத் தண்டித்தல் அரசனின் கடமை; அரசின் கடமை; ஆனால் அரசனோ, குடியாட்சி முறையில் தலைவனோ (முதல் அமைச்சனோ) தன் கடமையையும் பொறுப்பையும் மறந்து, ஆற்றலையும் அதிகாரத்தையுமே நினைந்து, பலரையும் வருத்தத் தொடங்கிக் கொடுமை செய்தால், அவன் கொலையாளிகளை விடக் கொடியவன் எனக் கருதப் பெறுவான். கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து(15.5) இட்லர், முஸ்ஸோலினியின் அடாத திருவிளையாடல் களை உலகம் அறிந்தது; அவர்கள் அழிந்ததும் இன்னும் நமது நினைவிலிருந்து மறையவில்லை. - இப்படிப்பட்ட கொடிய தலைவன் நெடுங்காலம் தான் நினைத்தபடி எல்லோரையும் துன்புறுத்திக் கொண் டிருக்க முடியாது. அவனால் அல்லல் படுகின்ற மக்கள்