பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் - I 5 தவறிப் பெறக்கூடிய செல்வம் நன்மையே தருவதாக இருந்தாலும் அதை அப்போதே நீக்கிவிட வேண்டும்’ (113) என்று அறிவுறுத்துவார். இப்படியாக அவர்சுறும் நெறிகளை-அறவாழ்வை-விரித்துக்கொண்டே போகலாம். திருமுருகாற்றுப் படையில், அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு) ஆறினிற் கழிப்பிய அறனில் கொள்கை (அடி 188.189) என்ற அடிகளில் குறிப்பிடப்பெறும் அறனில் கொள்கை” என்பதற்கு நாற்பத்தெட்டுயாண்டு பிரமச்சரியங் காத்து அந்தணர் அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட் டினை யுடையவர்கள்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க் கினியர். ஈண்டு அற நூல்களில் குறிப்பிடப்பெற்ற கோட் பாடு என்பதற்கு திருக்குறள் போன்ற நூல்களில் நுவலப் பெற்றுள்ள கருத்துகளையே குறிப்பிடுகின்றார் என்று கொள்வதில் தவறில்லை. - - பெரும்பாணாற்றுப் படையிலுள்ள 'அறம்புரி செங் கோல் (அடி-36) என்பதற்கு அறத்தை விரும்பின செங் கோலினையுடைய என்று பொருள்கூறுவர். ஒர் அரசன் போரில் பெறும் வெற்றி படைபலத்தால் மட்டிலும் அன்று: அஃது அறனெறி வழுவாத ஆட்சியாலேயாகும் என்று கூறும் புறநானுாறு. - கடுஞ்சினத்த கொல்களிறும் கதல்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மற்வரும்என நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" 10. புறம்-55