பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 3.25 பல நாளும் பொறுக்க முடியாமல் அழுது அழுது விடு கின்ற கண்ணிர் வீண் போகாது. இந்தக் கண்ணிருக்கு அளவற்ற ஆற்றல் உண்டு என்பதை நாம் அறிவோம். 'ஏழை அழுத கண்ணிர் கூரிய வாள் ஒக்கும் என்பது பொது மக்களிடையே வழங்கி வரும் பழமொழி அன்றோ? இந்தக் கண்ணிர்தான் கொடுங்கோலனுடைய செல்வ வாழ்வை அழிக்கக்கூடிய பெரும்படையாகும் என்பர் வள்ளுவப் பெருந்தகை; அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) என்பது அப்பெருமானின் திருவாக்கு. இந்த ஏழை மக்கள் அவனை எதிர்த்துப் போர் செய்ய மாட்டார்கள் என்பது உண்மையே. ஆனால் போரால் உண்டாகும் அழிவை விடப் பொல்லாத அழிவை உண்டாக்கி விடும் அவர்தம் கண்ணிர். கண்ணீர் எப்படி அழிக்கின்றது என் பதை வெளிப் படையாகக் காணமுடியாதுதான். ஆனால் அதனால் என்ன என்ன விளைந்து எப்படி எப்படி அவனு டைய அதிகாரக் கொடுமை அழிகின்றது என்பதை ஆராய்ந்து அறியலாம். இந்த உண்மையை விளக்க வர லாறுகள் உள்ளன. சீதை அசோகவனத்தில் வடித்த கண்ணிரும், உலகம் கேட்டிராத முறையில் திரெளபதி அவையில் அவமானப்படுத்தப்பட்டபோது உகுத்த கண்ணிரும், தன் கணவன் கோவலன் அநியாயமாகக் கொலையுண்ட போதும் பாண்டியன்முன் அப்பத்தினித் தெய்வம் வந்தபோதும் அவள் காவிஉகு நீரும் விளை வித்த செயல்களை காவியங்கள் நமக்குப் பறைசாற்றி உண்மையைத் தெளிவாக்குகின்றன. ஆனால், இன்றைய மக்களாட்சியில் என்ன மாறுதல் களை விளைவிக்க முடியும்? கூறுவேன்; கொடியவனுக்குத் துணையாக இருந்தவர்கள் எல்லோரும் அவனுக்குப்பகைவர் களாக மாறுதலும் கூடும்.அவனுக்கு அடங்கியிருந்தவர்களே