பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அவனை அடக்கக் கிளம்பிவிடுதலும் உண்டு. இவ்வாறு ப்லருடைய மனத்திலும் அவனை அழிக்கும் ஆற்றலை வளர்ப்பது எது? திக்கற்றவர்களின் கண்ணிர் தான் என் பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமுதவல்லி. உதாரன் வரலாற்றில் கண்ணிரின் ஆற்றலைப் பாவேந்தர் காட்டுவதைக் காண்போம். கதை நாம் அறிந்த கதைதான். படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணிர் வெள்ளம், அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்! ஆவென்று கதறினாள்! அன்பு செய்தோர் படிமீது வாழாரோ?' என்று சொல்லிப் பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள் கொடிதென்றார்; கொடுவாளைப் பறித்தார்; அந்தக் கொலையாளர் உயிர்தப்ப ஒட லானார்; கவிஞனுக்கும், காதலிக்கும் மீட்சி தந்தார்; காவலன்பால் து:தொன்று போகச் சொன்னார்: புவியாட்சி தனி உனக்குத் தாரோம் என்று போயுரைப்பாய்’ என்றார்கள்; போகா முன்னே, செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்; செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே நவையின்றி எய்து தற்குச் சட்டம் செய்தார் தவிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே! இந்தப்பாடல்களில் கவிஞர் கண்ணிரின் ஆற்றலை அற்புத மாகக் காட்டியிருப்பதைப் படிக்கும்போது நாமும் உணச்சிவயத்தராகி விடுகின்றோம் அல்லவா?* கண்ணிரின் ஆற்றலை நன்கறிந்த வள்ளுவர் பெருமான் மெலிந்து துன்புறுத்துகின்றவர்களின் கண்ணிரை ஒரு புறம் நிறுத்தி, கொடுங்கோலனுடைய அளவற்ற செல்வத்தை யும் அதன் வாயிலாகப் பெற்ற அதிகார பலத்தையும் 44. புரட்சி க்கவி : இறுதிப்பாடல்கள் இரண்டு