பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 32? மற்றொருபால் நிறுத்தி வலியன் ஆற்றலை மெலியவனின் கண்ணிர் வெல்லும் என்று கூறினார். அந்த வெற்றியைச் சிறப்பிக்கவே போர் செய்து வெல்லும் என்று கூறாமல் இருந்த இடத்திலிருந்தே அமைதியாக மெல்ல நிகழ்த்தும் ஒரு சிறுதொழில் போல் தேய்க்கும்-செல்வத்தைத் தேய்க் கும் படை என்று நுட்பமாக விளக்கிவைத்தார். இங்ஙனம் திக்கற்றவர்களின் கண்ணீர் காற்றில் உலர்ந்து போகும் எளிமையுடையது எனக் கருதுவது அறியாமை என்று புலப்படுத்த விரும்பி அதையே படையாக உணருமாறு: எடுத்துரைத்தார். உண்மையாகப் படைவைத்துக்கொண்டு தற்காப்புச் செய்து கொள்ளும் கொடுங்கோலனுடைய ஆற்றலை அந்தப்படையில் தெளிவாக எடுத்துக் காட் டாமல் அதை வெறும் செல்வம்' என்று சொல்லி உதா சீனம் செய்தார். வலிமையும் இழந்து படையும் இல்லாமல் வாடும் மக்களுடைய கண்ணிரின் ஆற்றலை உணர்த்துவதற் காக அதையே படை என்று சிறப்பித்தார். இரக்கத்திற்கும் ஓர் அளவு உண்டு; நெறிமுறையும் உண்டு. இத்தகைய இரக்கம் கொண்டு குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடுவது தவறு; பெருந்தவறு. ஆணவம் கொண்டு எல்லோருக்கும் துன்பத்தை விளைவித்தலோ மிகப் பெருந்தவறு. ஆகவே, கண்ணாற் காண்பதுவும் பொய்,காதாரக்கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்" என்ற பொன்மொழிக் கிணங்க குற்றம் புரிந்தவர்களைப் பற்றி நன்றாகக் கேட்டறிந்து நடுநிலையில் நின்று ஆராய்ந்து தண்டிக்கவேண்டும்; அவ்வாறு தண்டிக்கும் முறையால் அந்தக் குற்றவாளிகள் மறுபடியும். அந்தக் குற்றம் செய்யாமல் திருந்தும்படியாகத் தண்டிக்கவேண்டும். குற்றத்திற்கேற்ற தண்டனையாகவே விதிக்கவேண்டும் என்பது மிகவும் கவனத்திற்குரிய அம்சமாகும். தண்டனை வழங்கும்போது அளவுகடந்து தண்டிக்கப்படுபவர்போல் தொடங்கி அளவுமீறாமல் நிற்கவேண்டும். அதுதான் நீண்டகாலம் ஆக்கத்துடன் இருப்பதற்குரிய நெறியுமாகும்.