பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 28 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு வெறுப்பது வேந்து (561) கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் (562) என்ற வள்ளுவங்கள் இவற்றை விளக்கி நிற்கின்றன. பொதுவாழ்வில் உள்ளவன் அந்த வாழ்வில் உள்ள இந்தக் கடமையில் தான் மட்டிலும் எண்ணிப்பார்த்து ஒருவித முடிவிற்கு வருவதைவிட, தன்னைச் சார்ந்தவர் களோடு, தம்மைவிட ஆற்றலும் அநுபவமும் உள்ளவர் களோடு, கலந்து எண்ணிப்பார்ப்பது சிறந்தது; அவர் களோடு ஆய்ந்து எண்ணித் தண்டனை விதிக்காமல், தான் தனியாகச் சினம் கொண்டு சீறித் தண்டித்தல் ஆகாது. அவ்வாறு தனியே வெகுண்டு தண்டிப்பதால் செல்வாக்குப் படிப்படியாகச் சுருங்கிப் போகும். இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு (568) என்பது வள்ளுவம். பொது நன்மையைப் பற்றிய கருத்து இல்லாமல், சார்ந்தவர்களோடு கலந்து ஆராயாமல், பிறர்மேல் தன் சினத்தைக்காட்டி அல்லற்படுத்திச் செருக்கோடு செய லாற்றுகின்ற கொடியவனுடைய ஆட்சி முறையிலும் அவனுக்குத் துணையாக ஒரு கூட்டம் சேரும்; அந்தக் கூட்டம் கல்வியறிவு இல்லாத கசடர்களின் கூட்டமாக இருக்கும். சாதி வெறியைத் தூண்டியும், பணபலத்தைப் பல்வேறு விதங்களில் பிரயோகித்தும், பசப்புமொழிகளை பகர்ந்தும் பாமரர்களின் வாக்குகளைக் கொண்டு தேர் தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து விடலாம். விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளில் அமைத்த அரசு களில் இந்த முறையைக் காணலாம். கொடுங்கோலன்