பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 3 : 3 மேற்குறிப்பிட்ட கீழ்மக்களின் கூட்டத்தைக் கவர்ச்சி யாகத் தன் பக்கம் துணை சேர்ந்து வைத்துக் கொண்டி ருக்க முடியும். இப்படித்தான் நடைமுறையில் இருந்து வந்ததையும் கண்டோம். இது பயனற்ற கூட்டம்: நிலத்திற்கு வீண் சுமையான கூட்டம். இவர்களால் நாடு எந்தவிதமான முன்னேற்றமும் அடைதல் முடியாது. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்; அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (570) கல்வியறிவில்லாத மக்கள் எளிதில் ஒற்றுமைப்படமுடியும். இக்காலத்தில் மக்கள் தம் பக்கம் இருப்பதை மெய்ப்பிக்கச் நிரூபிக்கச்சாமான் வண்டிகளில் (Lorries) மக்களை ஏற்றிக் கொண்டு சென்று கூட்டங்களைப் பெருக்கிக் காட்டுவதை நாம் காணலாம். 'நாடகமே உலகம் என்ற ஒரு வாசகம் உண்டு. உலகமே நாடகம்' என்றவாறு அந்த வாசகம் மாறியிருப்பதையும் இன்றைய ஆட்சி முறைகளில் காண லாம். கட்சி முறையில் அமைக்கப்பெறும் அரசுகளில் இத்தகைய பண்பு இன்றியமையாத முறையில் ஊடுருவி நிற்பதையும் காணலாம். இங்ங்னம் நாடாளும் அரசு அமைப்பில் அறநெறி எப்படி ஒங்க முடியும்? அந்த செந்நெறி எங்ங்ணம் அவர் கள் உள்ளத்தைக் கவர முடியும்? அதனால் இந்தக் கீழோர்களின் கூட்டம் கொடுங்கோலனுடைய கொடிய செயல்களை அவர்கள் ஒருமுகமாகப் போற்றித் துணை நிற்பதையும் காணலாம். அதனால்தான் வள்ளுவர் பெரு மானும், கல்லார்ப் பிணிக்கும்’ என்று பிணித்தல்’ என்ற சொல்லால் விளக்குகின்றார். உலகத்தில் குடியாட்சி முறை சீர்பெற அமையும் நாள் வரும் வரையிலும் அரசிய லில் அறிஞர்கள் பெரும்பாலோராக அமைவது மிகவும் அருமையுடைத்தாகும். தப்பித் தவறி ஒரிருவர் இந்தக் கூட்டத்தில்வந்தாலும்அவர்களும் கல்வியறிவில்லாத மக்க ளின் மனம் உகக்குமாறு கவைக்குதவாத திட்டங்களை வகுத்