பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羟3碧 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 多、恐 நம, நத, முறைை தும் அவற்றைச் செயற்படுத்தியும் உயர்ந்த நெறியை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ள நேர்கின்றது. அதிகம் கூறு வானேன்? மறக்கவும் நேரிடுகின்றது. இதனை மாற்று வதற்குஅறிஞர்களும் நடுநிலைவகிக்கும் செய்தித்தாள்களும் ஆற்றும் முயற்சியும் பயனளிக்காமல் போகின்றன. பெரும் பாலான மக்கள் கற்றுத் தெளிந்தவர்களாக வாழும் காலம் வந்தால்தான் இந்தக் குறை தீர்ந்து குடியாட்சி முறை சீராக அமையும்; அமைந்து வாழும். கல்வியாலும் பிறவற். தாலும் முன்னேற்றம் அடைந்த மேல் நாடுகளில் அமையும் குடியாட்சி முறையிலும் பல பொத்தல்களைக் காணலாம். அதுவரை அறிஞர்கள் இஃது ஒருவித யுகதர்மம்’ போலும் என்று எண்ணி வாளா இருக்கவேண்டியதுதான். ஆயினும் பண்டைய முடியாட்சிக் காலத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன்தான் வாழ்ந்தனர். சில பேரரசர்கள், பல வேளிர்கள் இளங்குழவியின் உடல்நிலை அறிந்து அதற்கேற்ப வளர்க்கும் தாயரைப் போன்று முறை வேண்டினார்க்கு எளிமையாக இருந்து முறை வழங்கினர். குறை நீக்க வேண்டும் என்று வந்தார்க்கு குறைகளை நீக்கினர். புலவர்களும் நீதி வழுவாத நெறிமுறையினை அடிக்கடி வற்புறுத்தி வந்தனர். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்பானை நரிவெரூஉத்தலையார் பாடிய பாட்டின், ......நின்னொன்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரொடு) ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி அளிதோ தானே அது பெறலருங் குரைத்தே' tநிரயம்-தரகம்; காவல்-காக்கப்படும் தேயம்;ஒம்புமதி. பாதுகாப்பாயாக அளிது - அளிக்கத்தக்கது; பெறல் அருங்குரைத்து - பெறுதற்கரிது! 45. புறம் - 5