பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 露器芷 فإنه என்ற பகுதியில் இத்தகைய அறிவுரையைக் காணலாம். அரசர்கள் முறை தவறி நடக்கும் பொழுது செந். நாப் புலவர்கள் அவர்கள் வழியில் குறுக்கிட்டு நெறிப் படுத்தினர். இதனால் அரசர்கள் அருந்தமிழ்ப் புலவர்களி டம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் தெற்றெனப் புலனாகும். சோழன் நலங்கிள்ளி காவிரி பாயும் நாட்டுக் குரியவன். இவன் காலத்தில் சோழ நாட்டின் உறையூர்ப் பகுதிக்கு வேந்தாய் ஆண்டவன் சோழன் நெடுங்கிள்ளி என்பான். இந்த இருவர்க்கும் எவ்வகையாலோ பகைமை உண்டாயிற்று. நெடுங்கிள்ளி ஆவூர் சென்றிருக்கையில் ஆவூர் தனக்குரியதாதலால், அதனைத் தான் பெறுகைக் காகச் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். இவன்அஞ்சிப் போருக்கு எழானாக கோஆர்க்கிழார் இவ னிடம் குமறத்தி எழுவித்துப் போர் செய்யத் துரண்டினார். தோன்றலே, யானைகள் வெய்துயிர்த்து உரும் என முழங்குகின்றன; குழவிகள் பாலின்றி அலறி அழுகின்றன; மகளிர் மலரின்றி வறுந்தலை முடிக்கின்றனர். மனை யிடங்களில் எழும் அழுகுரல் நின் அரண்மனைக்கண் கேட்கின்றது; இவை நிகழவும் நீ அரண்மனைக்கண் அடங்கிக்கிடத்தல் இனிதன்று; முன்னே வந்து முற்றுகை யிட்டிருக்கும் வேந்தனைப் பார்த்து, ஈயும் அறவுணர்வால், இது நினக்கு வேண்டின் பெற்றுக்கொள்’ எனச் சொல்லி எயிற் கதவைத் திறத்தல் வேண்டும்; எதிரூன்றிக் காத் தலே மறம் என்பது நினது கருத்தாயின் போர் குறித்துத் திறந்து விடல் வேண்டும். அறவையும் மறவையும் அல் லையாய் மதிற்கதவைத் திறவாது ஒருபுறத்து ஒடுங்கிக் கிடப்பது நாணத்தகுவதொன்று' என்று கூறுகின்றார் (புறம்-44). சோழன் நெடுங்கிள்ளி ஆவூரினின்றும் எப்படியோ தப்பிப் போந்து தனக்குரிய உறையூரில் இருந்து வருகை யில், அதனையறிந்த நலங்கிள்ளி உறையூரையும் முற்றுகை