பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை விட்டான். ஒருகுடிப் பிறந்த சோழ மன்னர்களாகிய இருவர் தம்முள் பகை கொண்டு மாறி மாறிப் போருடற் றித் திரிதல் முறைமையுடையதன்று, அது இருவர்க்கும் நன் றன்று என்று கூறி இருவரையும் சந்து செய்விக்கின்றார் கோஆர்க்கிழார். இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்; கடுஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்: நின்ன கண்ணியும் மார்மிடைந்ததன்றோ, நின்னொடு - * பொருவோன் கண்ணியும் மார்மிடைந்ததன்றே ஒருவர் தோற்பினும் தோற்பதுதுங் குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால், குடிபொருள் அன்றுதும் செய்தி கொடித்தேர் தும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யுமிவ் இகலே" (tலைந்தோன் - சூடினோன்; தெரியல் - மாலை; ஆர்மிடைந்ததன்று - ஆத்தியால் செறியப்பட்டது; வேறல் - வெல்லுதல்; செய்தி - செய்கை, மெய்ம்மலி உவகை - உடம்பு பூரிக்கும் உவகை; இகல்-மாறுபாடு; என்ற பாடலில் சந்து செய்விக்கும் செயலைக் காணலாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன் பகைவனான மலையமானைப் போரில் தோற்கடித்து அவன் மக்களைக் கொணர்ந்து கொலை யானைக் காலின் கீழிட்டுக் கொல்ல முயல்கின்றான். கோஆர்க் கிழார் அதனைத் தவிர்க்கின்றார். 46. புறம் - 45.