பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இக்கியங்களில்-முறறைமல 莒岛器 நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை: இவரே, புலன்உழு(து) உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர் களிறுகண்டு) அழுஉம் அழாஅல் மறந்த புன்றலைச் சிறார் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கண்நோ வுடையர் கேட்டனை யாயின் நீ வேட்டது செய்மே” (அல்லல் - துன்பம், இடுக்கண் - துன்பம்; மருகனை - மரபில் உள்ளாய் புலன் - அறிவு; புன்கண் - வறுமை; தமது தமது பொருள் தண்நிழல்-குளிர்ந்த நிழல்; அழாஅல் - அழுதல் புன்தலை-புல்லிய தலை: சிறார். சிறுவர்; மன்று - சபை, மருண்டு - வெருவி; விருத்திற் புன்கண் - முன்பு அறியாத புதிய வருத்தம்; வேட்டது. விரும்பியது) என்ற பாடலில் இந்த நிகழ்ச்சியைக் காணலாம், இதன் கண், நீயோ புறாவின் பொருட்டுத் தன்னை வழங்கிய சோழன் மரபில் பிறந்துள்ளாய்; இவர்களோ புலவர்கட்குப் பெருங்கொடை நல்கி வாழும் பெரியோன் மரபினர்; மிக்க இளையர் இம்மன்றினை அஞ்சி மருண்டு நோக்குகின்றனர்; யான் கூறுவது கேட்டபின் விரும்புவது செய்க' என்று கூறுவதை அறியலாம். இப்பாடலும் இவரைக் கொல்லாமல் சந்துசெய்வித்தலின் பாற்படுகின் றது. ஒரு சமயம் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியிட மிருந்து போந்த இளந்தத்தன் என்ற புலவனை அவனது ஒற்றன் எனக் கருதிக் சொல்லப் புகுகின்றான். இதனைக் கண்ட செந்நாப்புலவர் கோவூர்க்கிழார், வேந்தே, 47. புறம் - 46,