பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.34 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வரிசை நோக்கி வாழும் புலவரது பரிசில் வாழ்க்கை பிறருக்குத் தீங்கு செய்வதன்று; வள்ளியோரை நாடிச் சென்று அவரைப் பாடி அவர் தரும் பொருள் கொண்டு பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவது பரிசிலர் செயல்: மண் ணாளும் தும்போன்ற செல்வமுடைய வேத்தரை ஒப்பக் கல்வியால் மாறுபட்டோரைத் தம் புலமையால் வென்று தலைமை பெறுவது அவர்க்கிய்ல்பு' என்று கூறி அவனை உய்விக்கின்றார் (புறம் - 47). சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சிக் காலத்தில் இவனைக் காண்பதற்கு வந்த புலவர் பலரும் இவனால் உயிரினும் சிறந்ததவர் களாகப் பாராட்டப்பெற்றனர். இவனைக் காண்பத்ற்கு வந்த மோசீரேனர்ர் என்னும் சான்றோர், வெற்றிமுரசு வைக்கும் கட்டிலின்மேல் தன்னை யறியாது கிடந்து உறங்கிவிட்டார். வெற்றித்திரு வீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறுபிறர் இருந்து உறங்குவது குற்றமாகும். அது செய்வோர் கொலைத் தண்டத்துக் குரியராவர். இஃது அக்கால அரசுமுறை. இதை யறியாதவர் மோசிகீரனார். அவர் உறங்கியதை அறிந்த இவ்விரும்பொறை இவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரி கொண்டுவீசலுற்றான் (புறம் - 50). இங்ஙனம் பல நிகழ்ச்சிகள் அரசர்கள் புலவர்கள்பால் பெருமதிப்புக் கொண்டிருந்தமையை அறிவிக்கின்றன. முறைமை தவறியபொழுது புலவர்கள் அவர்கட்குத் தக்க அறிவுரை கூறிய நிகழ்ச்சிகளையும் பண்டைத்தமிழ் இலக் கியங்களில் காண்கின்றோம். அரசர்களும் புலவர்களொடு பொதிந்து அவர்தம் கட்டுரை வழியே வாழ்ந்த தகுதியால் அவர் முறைமை கெடாது அரசோச்சும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். புலவர்களின் அறிவுரை அரசர்கட்கு எப் பொழுதும் எய்ப்பினில் வைப்பாக இருந்ததனால்