பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 5 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறையை fகளிறு-ஆண்யானை கதல்பரியவிரைந்த செலவையுடைய; கலிமாமனம் செருக்கிய குதிரை, நெடுங் கொடி-நீண்டகொடி: நிமிர்தேர்உயர்ந்த தேர்; மறவர்-வீரர்) இது பாண்டியன் இலவஞ்சிகைப்பள்ளித் துஞ்சிய நன் மாறனுக்கு மதுரை மருதன் இளநாகனார் கூறியதாகும். இதில் படை பலத்தைவிட அறநெறி அதிகமாக வற். புறுத்தப்பெறுவதைக் காணலாம். அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையில் உள்ள வேல் என்று பலர் எண்ணு கின்றனர். அது தவறு என்றும், அவன் ஏந்திய செங் கோல்தான் உண்மையாக வெற்றி தருவது என்றும் வள் ஞவர் கூறுவார். . வேலன்று வெற்றி தருவது: LD676T617 கோல்; அது உம் கோடாது எனின் (546) என்ற அவரது வாக்கு ஈண்டு சிந்தித்தற்கு உரியது. மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவது பணபலத்தால் மட்டிலும் அன்று: தேர்தலுக்கு நிற்பவர் தம்முடைய நற்செயலாலும், உயர்ந்த பண்பாலும் மக்கள் மனத்தைக் கவர்ந்திருந்தால் எதிர்த்தரப்பில் நிற்பவரின் பணபலத்தால் நடைபெறும் பிரசார பலமும்,அதிகாரபலமும் ஒன்றும் செய்ய முடியாது. இவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது மக்கள் தாமாக வந்து வாக்களித்து விடுவார்கள். 1952-இல் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒன்றில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை (சுயேச்சை வேட்பாளர்) ஆட்சிப் பொறுப்பிலி ருந்த கட்சி வேட்பாளர் தோற்கடிக்க முடியவில்லை என்பதைக் காண முடிந்தது. பெருந்தலைவர் காமராசரே ஒரு தேர்தலில் தோற்றுப் போனார் என்றால், இதைப் பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை.