பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 335 மன்னர்கள் ஆட்சி முறைமை கெடாமல் நடைபெற்று வந்தது. மக்களும் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடிகளாய்த் திகழ்ந்தனர். அவர்களது தண்ணிய குடை நிழலில் இனிமையுடன் வாழும் வாய்ப்பும் பெற்றிருந்தனர். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (388) என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கானார்கன் பண்டைத் தமிழ் வேந்தர்கள். முறைமை கெடாது ஆண்டு ஆழ்வார் நிலைக்கு உயர்ந்த சொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் (பெரு. திரு. 9 : 1) என்ற புகழ் மாலையுடன் திகழும் சேர வேந்தன், மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மா என் பால்நோக்கா யாகிலும்உன் பற்றல்லால் பற்றில்லேன் தான்நோக்கா(து) எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்(று) இருந்தேனே," |பற்று - சரணமாகப் பற்றுதல்; தார் - மாலை; நோக் காது - கவனித்துப் பாதுகாவாமல்; துயரம் - துன்பம்: கோல் - செங்கோல்) என்று பேசுகின்றான். வித்துவக்கோட்டு எம்பெருமானை நோக்கி எம்பெருமானே, நீ அருள் நோக்கம் செய்யா திருந்தாலும், நின்னைச் சரணமாகப் பற்றுதலைவிட்டு வேறொருவரைச் சரணமாகப் பற்றேன். குடிகளைக் காப்பதற்கென்று மாலையணிந்துள்ள மன்னன் அதற் கேற்றபடிக் குடிகளைக் கவனித்துப் பாதுகாவாமல் எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும் அவனுடைய 48. பெரு. திரு. 5:3.