பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.36 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கின்ற குடிமக்களை ஒத்துள்ளேன்’ என்கின்றார் குலசேகரப் பெருமாள். பண்டைக்காலத்தில் மக்களுக்கு மன்னன் செங்கோவின் மீது அளவற்ற நம்பிக்கை இருந்தது. முறைமையோடு அரசோச்சியவராதலால், மக்கள் அரசன் மீது கொண் டிருந்த பற்று போல் தன் பற்று இறைவன் மீது உள்ளது' என்கின்றார். வேந்தனின் வெண்கொற்றக் குடை நிழலை இறைவனது திருவடி நிழலுடன் ஒப்பிட்டு ஒதுகின்றமை நம் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளுகின்றது. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் (543) குடிதழி இக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு (544) என்ற வள்ளுவங்கள் பண்டைய மன்னர்களின் முறைமையை முத்தாய்ப்பாக விளக்கி நிற்கின்றன என்று காட்டியும், முற்றும் துறந்த பட்டினத்தடிகளும் ஊழின் முறைமையை ខ.: , என்செயல் ஆவது யாது.ஒன்றும் இல்லை இனித்தெய்வமே உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்.இந்த ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாது.ஒன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோஇங்ங் னேவந்து மூண்டதுவே.49 என்று பாடிய பாடலை நினைவு கூர்ந்தும் எனது இன்றைய பொழிவைத் தலைக்கட்டுகின்றேன். 49. பட்டினத்துப்பிள்ளை பாடல்-பொது.22.