பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 盘究 இன்று சங்க நூல் ஆராய்ச்சியாளர் இந்நூல்கள் பண்டைய தமிழர்களின் சிறந்த வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்று புகழ்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. தமிழ்ச் சான்றோர் களாகிய புலவர்களின் கருத்துகளைக் கொண்டு பொதுமக் களின் வாழ்க்கை உயர்ந்த நிலையில் இருந்தது என்று கூறுவது அவ்வளவு சரியன்று. ஏதோ ஒன்றிரண்டு அர சர்கள் சிறந்த கல்விமான்களாகவும், சான்றோர்களின் அற வுரைக்குச் செவி சாய்ப்பவர்களாகவும் இருந்தனர் என்பது உண்மையே. இது பல பாடல்களால் உறுதிப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பேரரசர்களும், சிற்றரசர்களும், வேளிர்களும் போர்களிலேயே தம் வாழ்நாட்களைக் கழித் தனர் என்ற செய்திகளே மிகுதியாகப் பாடல்களில் காணப்படுகின்றன. பொதுமக்களிடமும், ஏன்? மேட்டுக் குடிமக்களிடமும்-குடிப்பழக்கம் மிகுதியாக இருந்ததையும் பாடல்களால் நன்கு அறிகின்றோம். சங்க கால நூல் கட்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சங்க காலத்து வாழ்க்கை வேறு, அக்காலத்து நூல்கள் வேறு அல்ல. வாழ்க்கையே நூல்களாக உருவுற்றது' என்று கூறுவோர் கூற்று சங்க காலச் சான்றோர் வாழ்க்கையையே - அவர்தம் உயர்ந்த குறிக்கோளையே காட்டுகின்றதேயன்றி பொதுமக்களின் வாழ்க்கையையன்று என்பதே என் உள்ளத்தில் தோன்று கின்றது. - - ஆயினும், சங்க இலக்கியங்களில் காணும் சில அர சர்கள் அரச முனிவர்களாகத் திகழ்கின்றனர்; பெரும் பாலான புலவர்கள் அந்தண அறவோராகக் காணப் படுகின்றனர். சில வேளிர்கள் தந்நலம் காணா வள்ளல் களாகத் திகழ்கின்றனர். பிறர்க்கென வாழும் பெற்றியர் களாகப் பிறங்குகின்றனர். வீரர்களும் புலவர்களும் செய்ந்நன்றி மறவாச் செம்மல்களாக விளங்குகின் றனர். மாதர்கள் நடுநிலைப் பிறழாப் பெருந்தொண் டர்களாய்த் திகழ்கின்றனர். எனினும் பொதுமக்கள் த.இ.அ-2