பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星岛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வாழ்க்கை இங்கனம் இருந்தது என்றுகூற என் மனம்துணிய வில்லை. சங்க காலப் பொதுமக்கள் வாழ்க்கை சிறந் திருந்தது என்று வானளாவப் புகழ்வது உண்மைக்கு மாறா னது; பொருந்தாதது. பாடல்களில் காணப்படும் குறிப்பு கள் சான்றோர்கள் சிலரது வாழ்க்கையையே காட்டு பவை; அவர்தம் குறிக்கோள் நிலையையும் தெரிவிப் பவை. பொதுமக்கள் வாழ்க்கையைக் காட்டுவனவாகச் சொல்ல முடியாது. மனத் தூய்மையின் அடிப்படையில் அமைவதுதான் அறவாழ்க்கையாக இருக்க முடியும் என்று குறிப்பிட் டேன். மனத்துய்மை இல்லையாயின் காதல் வாழ்க்கை பால் மனம் பண்படுவதும் இல்லை. பொது வாழ்க்கை விலும் அந்த மனம் தக்கவாறு பயன்படுவதுமில்லை; துய்மையற்ற மனம் தானும் பண்படுவதில்லை. பிறர்க் கும் பயன்படுவதுமில்லை. தூய்மையே மனத்தின் ஆற்றல். துய்மை மிகுவதற்கேற்ப மனத்தின் ஆற்றலும் பெருகும். ஆணர்த்தோங்கும். தூய்மையுள்ள மனமே முற்றிலும் பண் படும்; முழுதும் பயன்படும். முழு வாழ்வு வாழும் இந்தத் துய்மையை விளக்குவதே திருவள்ளுவரின் அறத்துப் பாவின் நோக்கமாகும். அறத்தின் அடிப்படை மனத் து.ாய்மை என்பார் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்; ஆகுல நீர பிற (34) என்ற குறளால் விளக்குவார். மனத்துய்மை காதலியோடு வாழும் போது தெரிவதில்லை; பொது வாழ்வில் கடமையை ஏற்றுச் செய்யும் போதும் அது புலப்படுவதில்லை. மனத் இன் தன்மை இன்னது என்பதைத் தனி வாழ்க்கையில் மட் டுமே தெளிவாகக் காணமுடியும். தனி வாழ்க்கையில்தான் மனநிலை தெளிவுறுகின்றது. அப்பொழுதுதான் மாசுபட்ட நிலையையும், அல்லது மாசுபடா நிலையையும் அறிய முடிகின்றது. திருவள்ளுவர் அறத்துப்பாவில்