பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1 9. விளங்க உரைப்பது இத் தனிவாழ்க்கையேயாகும். மனம், உள்ளம் என்னும் சொற்கள் காமத்துப்பாலிலும்,பொருட் பாலிலும் எங்கோ ஓரிரண்டு இடங்களில்தான் காணப்படு கின்றன. அறத்துப்பாலில் தான் இச்சொற்கள் பல இடங் களில் திரும்பத்திரும்ப கையாளப்பெறுகின்றன. அற நெறியில் வாழ்ந்தால்தான் இன்பம் உண்டு என்றும் அந் நெறி தவறினால் துன்பம் உண்டு என்றும், அதனால் மனம் தூய்மைப் பட்டு அறநெறியில் நிற்றலே இன்ப வாழ்க்கைக்கு வழி கோலுவதாகும் என்றும் அறத்துப்பா லில் விளக்கம் அடையச் செய்கின்றார். ஆனால் இந்த விளக்கம் யாருக்குப் பயன்படும்? இன்றைய நாகரிக உலகில் பலருக்குத் தனி வாழ்க்கையே இல்லை என்பது தெளிவு. இன்றைய நகர வாழ்க்கையில்ஏன்? நரக வாழ்க்கையில்-மனிதன் வாழ்வது இயந்திர வாழ்க்கை. ஏதோ தொழிலை நாடிப் பகற்பொழுது முழுதும் அதில் கழிந்து போகின்றது. எஞ்சிய நேரம் தொழில் தொடர்புடையவர்களோடு கழிகின்றது. வழக் குரைஞர்கள், மருத்துவப் பெருமக்கள், ஆசிரியப்பெருமக் கள் போன்ற அறிவாற்றலுள்ள வகுப்பினரும் (Intellectual Class) இதற்கு விலக்கு இல்லை. இரவில் இல்லம் வந்து உறங்கி விடுகின்றனர். நகரங்களில் பெரும்பாலோரின் வாழ்க்கையில் இந்த நிலையைத் தான் காண்கிறோம். தொழிலாளர்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. பலர் ஊதிய அளவறிந்து வாழத் தெரியாததாலும், வருவாய் பலருக்குப் போதாமையாலும் வீட்டிற்கு வந்ததும் பொருளாதாரச் சிக்கலமைந்த வாழ்க்கைதான் பலருக்கு அமைந்துள்ளது. அவர்கள் தங்கள் வீட்டிலும் பொருட் பாலைத்தான் காணமுடிகின்றது; அறத்துப்பால் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை; சிந்தையிலும் எழுவ தில்லை. கருத்து ஒருமைப்பாடு இல்லாத கணவனும் மனை வியுமாக வாழ்வோர் பலர். மரபுவழியில் பெற்றோர் கருத்துப்படி மண்ம் புரிந்து கொண்டவர்களின் நிலையிலும்,