பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

湾碧 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தாமே தேர்ந்தெடுத்துக் கொண்டு களவுமுறையில் மணந்து கொண்டவர்கள் நிலையிலும் இதனைத்தான் காணமுடி விட்டிலும் மனநிலை தெளிவாகப் புலப்படுவதற்கு வாய்ப்பில்லை. வெளியுலக வாழ்வில் காணும் பொருளா தாரம் போர் வீட்டிலும் சிறிய அளவில் தலைகாட்டு கின்றது. இந்தச் சூழ்நிலையில் அன்பும் ஆர்வமும் தலை யெடுக்க இடம் ஏது? ஆயினும் இந்தச் சூழ்நிலையில் வாழ் கின்றவர்களுக்கும் என்றேனும் ஒரு நாள் ஒரு வேளை தனித்திருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது மனம்எழுந்து தன்னை விளக்கிக் கூறுவதுண்டு. 'தன்நெஞ்சே தன்னைச் சுடும்' (293) என்றவாறு மன ஆற்றல் செயற்படும். இதனைத்தான் நாம் மனச்சான்று என்று வழங்குகின் றோம். இந்தச் சான்றே உள்ளப்போராட்டத்தை நிகழ்த்தி வரும் அற்புத ஆற்றல். இங்ங்ணம் தனிவாழ்க்கை வாழ்ந்து உள்ளப் போராட்டத்தை உணர்வோரில் சிலர் திருந்தி நல்லவர்களாதலும் உண்டு. இந்நிலையில் அவர்கள் ச ை- ந் த ம ன த் ைத ந ன் கு உ ண ர் ந் து: வருந்தி மாசு போக்கித் தூய்மை அடைவதும் உண்டு. இந்த வாய்ப்பையும் பலர் இழந்து விடுகின்றனர். இத்தனைப் போராட்டத்தைத் தாங்க முடியாமல் புலன் களை மயக்கும் வகையில் ஏதாவது ஒன்றை நாடிச் சென்று விடுகின்றனர். இந்த மயக்கம் வந்து அமைந் தால் மனம் தன் நிலையை விளக்காமல் மங்கி நிற்கும்; ரசம் போன கண்ணாடி போலாகிவிடும். இதனால் மனச் சான்று தன் குற்றத்தை இடித்துச் சொல்லாதவாறும் தடுக்க முடிகின்றது. இதனால் அந்த நேரத்திற்கு அவர் கட்கு நன்மை பயப்பதைக் கண்டவுடன் அடுத்த நேரத், திற்கும் அதையே விடாமல் நாடுகின்றனர். தனி வாழ்க்கை கிடைத்த போதெல்லாம்-மனப் போராட்டம் தொடங்: கும் போதெல்லாம்-அதனை நாடி நாடி உளப்போராட்.