பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 21 டத்திற்கே இடம் இல்லாது செய்து விடுகின்றனர். இந்த மயக்கத்தை விளைவிக்கும் மூலங்கள் எவை? வரைவின் மகளிர், மதுபான வகைகள், சூதாட்ட முறைகள், கெட்ட நாடகம் அல்லது படக்காட்சிகள், கெட்ட புதினங்கள் போன்ற தீய கலைப்பகுதி ஆகியவையே இவை. இவற் றில் அடைக்கலம் புகாதிருக்கும் பொருட்டே வள்ளுவர் பெருமான் தமது அறநூலில் கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர், கூடா நட்பு, சிற்றினம் சேராமை, தீநட்பு, சூது, பிறனில் விழையாமை போன்ற அதிகாரங்களில் நம்மை அந்த வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகின்றார். இத்தகைய அறிவுரைகளைக் கேட்பவர்க்கே இது பயன் படும்; மனச்சான்றும் சுடும், அண்மையில் நம்முடன் வாழ்ந்த பாரதியார் கூடத் தான், சென்றதினி மீளாது மூட ரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெல்லாம் அழிந்துபோம் திரும்பி வாரா.' என்று கடந்ததை மறந்து புதிய வழியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார். மேலும், பேயாய் உழலும் சிறும னமே பேனாய் என்சொல் இன்றுமுதல்; நீயாய் ஒன்றும் நாடாதே; தினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் 11. பா. க. வே. பா. சென்றது மீளாது"