பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 盏 g ஓயா தேதின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.’ என்று நமது மனச்சான்றை எழுப்புகின்றார்: மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்துகின்றார். இவை யாவும் செவி டன் காதில் ஊதிய சங்கொலியானால் யார்தான் என்ன சேய்ய முடியும்? உறுதிப்பொருள் நான்கையும் 'அகம்' என்றும் புதம்' என்றும் வகைப்படுத்தி மொழியலாம் என்றும், இன்பத்தை துவலும் பொருள் அகத்தில் அடங்கும் என் தும், ஏனையவை புறத்தில் அடங்கும் என்றும் முன்னர்க் கூறினேன். ஈண்டு முதலில் அகப்பொருளில் அறம்' செயற்படுவதைக் காட்டுவேன். 1. அகப்பொருளில் இன்பத்தை துவலும் அகப்பொருள் முழுவதிலும் அறம் இழையோடுவதைக் காணலாம். பருவம் நிரம்பிய ஆண்மையும் பெண்மையும் பார்த்ததும் உள்ளம் ஒன்றிக் காமப் பித்தேறுவதன் காரணம் யாது? உளவியலார் பாலுந்தல் (Sex drive) என்று கூறுவர். எண்ணற்ற நம்பி யரும் தங்கையரும் நாடோறும் சாலையிலும், சோலை விலும், இளமரக்காவிலும், படக்காட்சிக் கொட்டகைகளி லும், பிற இடங்களிலும் காணப்படுகின்றனர். என்றாலும் யாரோ ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கின்றான்; யாரோ ஒருத்தி ஒருவன்மீது கண் வலை வீசுகின்றாள். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விழையும் இச்சிறப்புப் பார்வை ஆய்தற்குரிய அரிய சிக்கலாகும். எனினும் நம் முன்னோர் இதற்குக்காரணம் காணவும் முனைந்தனர். 12. டிெ : டிெ - மனத்திற்குக் கட்டளை"