பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3. தமிழ் இலக்கியங்களில்-அறம் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப." (பால்-ஊழ்! என்ற நூற்பாவால் காரணம் காட்டி விளக்குவர் தொல் காப்பியர். நல்லூழின் ஏவலால் காட்சி நிகழும் என்பது அப்பேராசிரியரின் கருத்தாகும். 'கிழவனும் கிழத்தியும் காண்ப' என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் சிறப்பியல் முன்னதாகக் காதலித்தவர் யார் என்ற வினாவுக்கு இடம் வைக்கவில்லை என்பது சிந்திக்கத் தக்கது. இப்பாலதாணையை, சங்கப்புலவர்களும் ஒப்புக் கொண்டதைக் காண்கின்றோம். பால்வரைந் தமைத்தல் அல்லது அவர்வயின் சால்பளந் தறிதற்கு யாஅம் யாரோ' (பால் - ஊழ்வினை; வரைந்தமைத்தல் - வரையறுத்துப் பொருத்தப்படுதல்; சால்பு - தகுதி, அளந்து - வரை யறுத்து) என்று கூறுவர் பேரிசாத்தனார். காப்பு மிக்கதனால் வேறு பட்ட தலைவியின் நிலை கண்டு அதற்குக் காரணம்கேட்ட செவிலிக்குத் தலைவி கூறுவது இது. அறத்தொடுநிற்றல் என்பது துறை. அம்மூவனாரும், பிறிதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே." (பால் - ஊழ், தெய்வம்; பிரிதொன்றாக - வேறொரு வகையாக;. 13. தொல். களவியல்-5. 14 குறுந் 366 15 ஐங்குறு- 110.