பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念萱 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்று மொழிவர். இது நொதுமலர் வரைவின்கண் தோழி அறத்தொடு நின்றதாகும். ஊழ் குல மகளிர்க்கு ஒருவனைத் தலைவனாக்கிய பின்னர் மற்றொருவனைத் தலைவனாக் கும் ஆற்றலுடையதன்று என்கிறாள் தோழி. காதற் பாங்கை அழுந்த ஆராய்ந்த மோதாசனார் என்ற மற்றொரு குறுந்தொகைப்புலவர், இவனிவள் ஐம்பால் பற்றவும் இவனிவன் புன்தலை ஒரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஒதில் சிறுசெரு உருப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே..' (ஐம்பால் - கூந் த; ஒரி - ஆண்தலை மயிர் வாங் குதள் - வளைத்து இழுப்பாளாய் பரியவும்: - ஒடவும்: தவிர்ப்பவும் தடுக்கவும்; செரு சண்டை துணை பிணை கல்-இரட்டை மாலை; இயற்கை - இயல்பு நல்லை - நன் மையையுடையாய்) என்று கண்டோர் கூற்றாகக் கூறுவர். இவர் கருத்துப் படிக் காதலர் வெவ்வேறு இடத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. முன்பின் அறியாத புதியவராதல் வேண்டும் என்பதுமில்லை. நாடோறும் பல்கால் பழகி வரும் இளையா னும் இளையாளும் என்றோ ஒருநாள் திடீரெனக் காதல் தோன்றப் பார்த்தல் இயல்பாகும்! பாலை நிலத்தில் உடன் போக்கில் காதலரைக் கண்டவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். இவர்கள் சிறுபருவம் தொட்டு இவர்களை 18. குறுக். 229