பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 தமிழ் இலக்கியங்களில்-அறம் அறிந்தோராதலின் பாலாற்றலை வியந்து கூறுகின்றனர். இப்பாடல் தொல்காப்பியரின் பாலதாணையின்' என் பதற்கு நல்ல விளக்கமாக அமைந்து கிடத்தல் கண்டு மகிழத் தக்கது. இங்ஙனம் ஊழ்வலியால் களவு முறையில் இணைந்த காதலர் வாழ்வில் அவர்கள் கற்பு நிலைக்கு வரும் வரை யில் அவர்கட்கு உதவியாகப் பாங்கன், தோழி, செவிலி முதலியோர் பங்கு பெறுவதை அக இலக்கியம் காட்டு கின்றது. இங்ங்னம் பங்கு பெறுங்கால் பாங்கன் தலை வியைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பாங்கனும் தலைவியும் காதலர்களாக மாறுவதில்லை. தோழியும் தலைவனும் சந்திக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் இவர்களும் காதலர்களாக மாறுவதில்லை. தன் மகளைத் தேடித் திரியும் செவிலி வழியில் கண்டோ ரைக் காணும் வாய்ப்புகள் இருக்கும். இந்நிலையில் இவர்கள் பெருந்திணை ஒழுக்கத்தில் இறங்குவதில்லை. உளவியல் பாங்கின்படி இத்தகைய கைக்கிளை, பெருந் திணைக் கூறுகள் இவர்கள் உள்ளத்தில் முகிழ்த்தாலும் அவை நடைமுறைப்படுவதில்லை. இங்ங்னம் நடைமுறைப் படுத்தவும் கவிஞர்கள் விடுவதில்லை. அக இலக்கிய மாந்தர்கள் படிதாண்டாப் பத்தினி போல' , ஒட்டப் பந் தயத்தில் ஒடும் போட்டியாளர்களைப்போல், ஒரு வரை யறைக்குள்தான் இயங்குவார்கள். இந்த வரையறையைத் தாண்டி - இந்த மரபுகளை மீறி - அகத்திணை மாந்தர்கள் ஒழுகுவதில்லை. உலகில் எந்தமொழி இலக்கியங்களிலும் காணப்படாத ஓர் உயர்ந்த தத்துவம் இது. இந்த உயர்ந்த ஒழுக்க நெறியில் ஒரு கூறு அறத் தொடு நிற்றல் என்பது. இதை விளக்கினாலே அகஇலக் கியங்கள் அறத்தைக் கட்டிக் காப்பதை அறிந்துகொள்ள லாம். இதனை விளக்குவேன். அறத்தொடு நிற்றல்' என்றால் என்ன? தலைவனும் தலைமகளும் காதல் வாழ் வில்-களவு முறையில் நடைபெற்ற காதல் வாழ்வில்-இது