பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 27 வைத்தமையைக் கண்டு உண்மையிலேயே இறும்பூது அடைகின்றோம். அறத்தொடு நிற்கும் முறையும் ஒருவித ஒழுங்கிலேயே நடைபெறுவதாக அகத்துறை இலக்கணமும், அகத்துறைப் பாடல்களும் உணர்த்துகின்றன. தலைமகளால்தோழிக்கும், தோழியால் செவிலிக்கும், செவிலியால் நற்றாய்க்கும், நற் ஹாயால் தந்தை தன்னையர்க்கும் களவொழுக்கச்செய்தி வெளிப்படுத்தப்பெறும் என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப் பிடுவர். தலைவி பாங்கிக் கறத்தொடு கு. பாங்கி செவிலிக் கற்த்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும் நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்கும் என்ப நெறியறிந் தோரே." என்பது நாற்கவிராச நம்பியார் கூறும் விதி. களவொழுக் கத்தை யார்யார் யார் யாருக்கு வெளிப்படுத்தலாம் என்ற ஏணி வைத்தாற்போன்ற மனநிலைகளையுடையது என்பது இதனால் தெளியப்படும். தோழியும் அறியாது மறைந்தொழுகிய தலைவி தன் களவினை அவளுக்குக் கூறி அறத்தொடு நிற்பாள். பின்னர்த் தோழி தன் தாயா கிய செவிலிக்கும், செவிலி தலைவியின் தாயாகிய நற்றாய்க் கும் களவைக் கூறுவர். இதுவே வயதுக்கும் உறவுக்கும் ஒத்தமுறையாகும். நற்றாயோ தலைவியின் தந்தைக்கும் உடன் பிறந்தோருக்கும் சொல்லாற் கூறாது அவர்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பால் தெரிவிப்பாள். தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப" (முன்னம் - குறிப்பு) என்னும் உள்நயம் நினையத் தகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் பெண்பாலார்ஆதலின் 20. நம்பிஅகப். 48 21. களவியல்- 47