பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 岛奥 வேண்டுமாதலால் தோழி அறத்தொடு நில்லாத முறை யொன்றினால் திருமணம் முடிக்க முயல்வாள். களவுச் சுவடு தெரியாமல் பல தீமைகள் முளைப்பதற்கு முன் னரே தலைவன் வரைந்து கொள்ள வேண்டும் என்பது தோழியின் நோக்கம். அகநானூற்றுத் தோழியிடம் இந்த ஆசையைக் காணலாம். வரையின் எவனோ வான்தோய் வெற்ப! கனகலை இகுக்கும் கறியவர் சிலம்பின் மனப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போலஇவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே?” (வரையின் - மணந்து கொண்டால்;எவனோ-என்னை; கணம் - கூட்டம்; கலை - மான்கள்: இகுக்கும் - ஒலிக்கும்; கறி . மிளகுக்கொடி சிலம்பு - மலைச் சாரல்; மனப்பு அரும்-எய்து தற்கு அரிய மன்றல்-மணம் அயர-நிகழ்ந்திட ‘வெற்பனே, மான்கூட்டமும் மிளகுக்கொடியும் படரும். மலைப் பகுதியில் நீ நிகழ்த்திய களவொழுக்கத்தை எம் உறவினர் அறியாரன்றோ? அவர் அறியாத நிலையில் மரபு மனம் செய்து கொள்க. கொள்வை யாயின் நின்னை முன்பின் அறியாதார் போல் நடந்து கொள் வோம். இவளும் முதன்முதல் நின்னைக் காண்பவள் போல நாணம் அடைவாள். அவள் பொய்யாக நாணி நிற்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வோம்’ என்று தன் ஆசையைச் சொல்லுவதுபோல் அறிவு கொளுத்துவதை யும் கண்டு மகிழலாம். 23. அகம்-112