பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3鑫 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அறத்தொடு நிலை பக்தி இலக்கியத்தில் ஆழ்வார் அமைத்த முறையைக் காட்டுவேன். தோழியின் பாசுர மாகச்' செல்லும் குட்டநாட்டுத் திருப்புலியூர் (மலை நாடு) மாயப்பிரான்மீது நம்மாழ்வார் பாடியுள்ள திரு வாய் மொழியில் இத்துறை மிக அருமையாக அமைந் துள்ளது (திரு வாய-8.9). பராங்குச நாயகி’ வயது முதிர்ந்து மங்கைப் பருவம் அடைகின்றாள். கணவனை நாடி அடைய வேண்டிய வயதல்லவா இது? திருப்புலியூர் எம்பெருமானுடன் இயற்கை புணர்ச்சி’யும் நடைபெற்று விடுகின்றது. தலைவியின் உயிர்த்தோழியானவள் தலை வியின் உருவ வேறுபாட்டாலும், சொற்களின் வேறுபாட்டாலும் புணர்ச்சி நடைபெற்றமையை ஒரு வாறு அறிகின்றாள். தன் மகளின் உண்மை நிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை உறுதிசெய்து மனமுரசும் அறிவிக்கின்றனர். பரதனே அரசன் என்று அறிவித்த முரசொலி கேட்டபோது 24. வைணவ பக்தி இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்கள் தோழிப்பாசுரம்', 'தாய்ப்பாசுரம் மகள் பாசுரம் என்று வகைப்படுத்தப் பெற்று அவற்றிற்குத் தத்துவமும் கூறப்பெறும். சைவ இலக்கியங்களில் பொதுவாக நாயக-நாயகி பாவனை என்று சொல்லப்படுமேயன்றி, தத் துவம் கூறப்பெறுவதில்லை. 25 ஆழ்வார்கள் பெண்தன்மை எய்திப் பாசுரங்கள் அமைக்கும்போது நம்மாழ்வார் (பராங்குசர்) 'பராங்குச நாயகி என்றும், திருமங்கையாழ் வார் (பரகாலர்) பரகால நாயகி என்றும் வழங்கப் பெறுவர். பக்தி இலக்கியத்தில் ஆன்மா - பரமான்மாவுடன் இணைவதுதான் புணர்ச்சி என்பது., இந்த நிகழ்ச்சியில் நடை பெறும் பல்வேறு கட்டங்கள் (துறைகள்) சாதாரணமாக அகப்பொருளில் வரும் துறை கள்போல் அமைத்துக் காட்டப் பெறும்.