பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைவை தோழி முதலில் இவ்வாறு தொடங்குகின்றாள்: கருமா னிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல் திருமார்பு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்தபிரான் திருமால் எம்மான் செழிநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் அருமான் பேரன்றிப் பேச்சிலள் அன்னை மீரிதற் கென்செய்கேனே(1) (மணித்தடம்- தெளிந்த தடாகம்; உந்தி-கொப்பூழ்; கால்- திருவடி உடை தரித் திருக்கும்; செய்ய ஆடை எனக் கூட்டுக; பேர்- திருநாமம்) என்பது பாசுரம். எம்பெருமானின் திவ்விய அவயவங்களின் அழகினைக் கண்டு அவ்வடிவழகு அல்லது மற்றொன்று அறியாதபடி ஈடுபட்டாள் என்று தாய்மாருக்கு உரைக் கின்றாள். அநுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமை. யுடையதாய், பிரகாசத்தால் மிக்குஇருப்பதாய், தனக்கு மேல்ஒன்று இல்லாததான இனிமையுடையதாய் இருப்பது ஒருமலைமேலே என்ற கருத்துத்தோன்ற கருமாணிக்க மலைமேல் என்கின்றாள். இத்தகைய ஒரு மலைமீது தெளிந்த ஒருதடாகம் தாமரைக்காடுகள் பூத்தனபோல்: எம்பெருமானது எழில்நீலமேனியில் திருமார்பு, திருவதரம், காண்க. இராமனைப் 'பெருமாள், என்றும் , அவன் அயோத்தியிலிருந்து கொண்டு வந்துநிறுவிய ஆரங்கநாதனைப் பெரியபெருமாள்' என்றும் இராமனது தம்பி இலக்குவன்ை 'இளையபெரு, மாள்' என்றும் வழங்குதல் வைணவ மரபு. இரா மன்மீது பக்திகொண்ட குலசேகராழ்வாரைக் 'குலசேகரப்பெருமாள்' என்று வழங்குவதுண்டு. ஆகவே அவர்த்ம் பதிகங்கள் 'பெருமாள் திரு. மொழி என வழங்கப்படலாயிற்று.