பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 33. திருக்கண்கள், திருக்கைகள், திருவுந்தி, திருவடிகள் முதலிய உறுப்புகள் அமைந்துள்ளன என்பது தோன்ற 'மணித்தடம்தாமரைக்காடுகள்போல் திருமார்பு வாய் கண் கையுந்தி காலுடை யாடைகள் செய்த பிரான் என்கின் றாள். பக்தர்கட்குப் பற்றுக்கோடாகவுள்ள பெரியபிராட்டி யார் எழுந்தருளியிருக்கும் திருமார்பாதலால் அது சிவந்து காணப்படுகின்றது. அப்பிராட்டி வழியால் உறவுசெய் தாருக்கு அநுகூலமான சொற்களைப் பேசுகின்றது.அவளது திருப்பவளம். இச்சொற்கள் சொல்லப்புக்கு இனியனான தன்னைக் கண்ட காட்சியால் தடுமாறினால் குறையும் தலைக்கட்டிக்கொடுப்பது செவ்வரி படர்ந்த திருக்கண். அவனது நோக்கில் தோற்றாரை அணைப்பது திருக்கை. உத்தேசியமான நிலத்தில் (அதாவது திருவடியில்) விழா நின்றால் காற்கட்ட வல்லது திருவுந்தி. இது நடுவே அமுக் கும் சுழியன்றோ? இவை எல்லாவற்றுக்கும் தோற்று விழும் இடம் எம்பெருமானது திருவடிகள். இவை யாவும் காட்டிலெறிந்த நிலாப்போலாகாமல் பக்தர்கட்கு அது பவிக்கக் கொடுக்குமவன் என்பதைக் குறிப்பிடவே பிரான் (உபகாரகன்) என்கின்றாள். இங்ங்னம் எம்பெருமானின் திருமேனி அழகினை, "என்னரங்கத்து இன்னமுதிதர் குழல்அழகர் வாய் அழகர் கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகர்.’’ Iகுழல்-திருமுடி) என்று ஆண்டாள் கூறி அநுபவித்ததையும் நினைந்து பார்க் கின்றோம். மேலும் இங்குப் பர வியூக விபவம் இவற்றிற் குரியத் திருநாமங்களையும் சொல்லாமல், அல்லாத உகந் 29. நாச். திரு 11:2 3 --س ہفت. (ري. وهي