பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总4, தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தருளின திவ்விய தேசங்களில் நிற்கின்றவர்களின் பெயர் களையும் சொல்லாமல் குட்டநாட்டுத் திருப்புலியூர் எம். பெருமானுடைய திருநாமங்களையே வாய்வெருவா நிற் கின்றாள் என்பது தோன்ற திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்' என்கின்றாள். அவள் நிலை தனக்கு அப்போதுதான் தெரியும் என்பது தோன்ற அன்னைமீர், இதற்கு என் செய்கேன்?’ என்கின்றாள். இந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி யைச் சதா புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் தலைவி என் பதையும் குறிப்பிடுகின்றாள். புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே’ (2) என்பதாக. அணிமேருவின் மீதுலவும் துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல் மன்னு நீள்முடி யாரம்பல்கலன் தானுடை எம்பெருமான். (2) 1அணி-அழகிய துன்னு-செறிந்து ஞாயிறு-கதிரவன்; பல்சுடர்-கோள்கள், உடுக்கள்; முடி-கிரீடம்; ஆரம்-மாலை} என்ற பாசுரப் பகுதியால் அத்திருப்பதி எம்பெருமானது திவ்விய ஆபரண அழகில் தலைவி ஈடுபட்டுப் பேசும் 1-յէֆகளை எடுத்துரைக்கின்றாள். மேரு மலையின்மீது ஆயிரம் கதிர்கள் விரித்தாற் போன்ற திருவபிடேகமும் விண்மீன் கூட்டங்கள் மின்னினாற் போன்ற பல மாலை வரிசைகளும், மற்றும் அணிவகைகளும் ஒளிரும் அழகை என்னவென்று சொல்வது?’ என்று வாய்வெருவி நிற்கின், றாள். என்று குறிப்பிடுகின்றாள் தோழி. இவற்றாலும் சோலையைப்பற்றிக் குறிப்பிடுவதாலும் இவளுக்கு அத் தலத்து எம்பெருமானோடு கலவி தேர்ந்ததாகவே நினைக் கத் தோன்றுகிறது என்பது தோழியின் குறிப்பு.