பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அற்ம் 器器 ஆழ்வார் நாயகி இரவும் பகலும் திருப்புலியூர் வளத் தையே புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் எனபதை அடுத் துக் குறிப்பிடுகின்றாள் தோழி. புகழும் இவள் நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு, எங்கும் திகழும் எரியொடு செல்வதொப்பச் செழுங்கதிர் ஆதிமுதல் :புகழும் பொருபடை ஏந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான் திகழும் மணிநெடு மாடம்நீடு திருப்புலி யூர் வளமே. (3) (பொருநீர்கடல் - அலையெறியும் கடல்; திப்பட்டு நெருப்புக் கொளுத்தி எரி-தீக்கொழுந்து: ஆழி-சக்கரம்; பொருபடை போர்செய்யும் ஆயுதங்கள்: பொன்றுவித் தான் - அழித்தவன்) என்பது பாசுரம். கடல்வண்ணனான எம்பெருமான் திரு வாழியாழ்வான் முதலான திவ்வியாயுதங்களை அணிந்து கொண்டு எழுந்தருள்வது ஒருகடல் நெருப்புக் கொளுத்தி நடந்து செல்கின்றதோ’’ என்று ஐயுறும்படியாக உள்ள தென்கின்றாள். அன்றியும், இந்த எம்பெருமான் திரு வாழி திருச்சங்கு முதலிய திவ்வியாயுதங்களுடன் போர்க் களத்தில் சென்று அரக்கர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலும் இடையீடின்றிப் புகழ்ந்து கூறாநின்றாள். அதனாலும் இத்திருப்பதி எம்பெருமானு டன் இவளுக்கு ஒரு சம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்று கின்றது என்று குறிப்பாகப் புலப்படுத்துகின்றாள் தோழி. மேலும், தோழி கூறுகின்றாள்: 'வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும்சோலை, கொண்டல்மீ தன வும் சோலை, குயிலினம் கூவும்சோலை, அண்டர்கோன்