பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அமரும் சோலை' என்றெல்லாம் சோலை வளத்தைப் பேசுகின்றாள். 'வயலடங்கலும் கரும்பும் செந்நெல்லு மாய் வளர்ந்திருக்கும் அழகைச் சொல்லுகின்றாள்.அங்கு உழுவதும் நடுவதுமான பண்ணையில் நடைபெறும் செயல்களின் அழகினையும், சுற்றிலும் நீர்நிலைகள் சூழ்ந்திருக்கும் வனப்பையும் வாய்வெருவுகின்றாள். இங். ங்ணம் இப்பெண்பிள்ளை பேசும் அழகுகளை என் சொல் வேன்? இத்துடன் நின்றாளா? சீர்வளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான் பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்பேச் சிலள் (4) இத்தலத்து எம்பெருமானின் ஆபத்தில்தோழன்' என். றிருக்கும் திருக்குணத்தில் ஈடுபட்டு அவன் பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் திருவயிற்றில் வைத்துப் படைப்புக் காலத்தில் அவற்றை வெளிநாடு காண உமிழ்ந்து அற்புதச் செயலையும் பேசுகின்றாள். இவற்றையெல்லாம். சொல்லும்போது இவளுடைய வடிவு ஆபரணம் பூண் டாற்போன்று விளங்கும் அழகு சொல்லுந்தரமன்று” என்று குறிப்பிடுகின்றாள். இதனாலும் இத்தலத்து எம். பெருமானுடன் கலவி நேர்ந்திருக்க வேண்டும் என்கின் றாள் தோழி. இன்னும் இத்தலத்து எம்பெருமானுடன் புணர்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும் என்பதற்குச் சான்றுகளையும் காட்டத் தொடங்குகின்றாள். - புணையிழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்க ணரிப்பும் நினையும் நீர்மையதன்று இவட்கிது; 30. திருமாலை. 14