பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喹酶 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உண்டோ? என்கின்றாள். 'இராஜ புத்திரனை அணையா தார்க்குக் கோயில் சாந்து நாறுகைக்கு விரகு உண்டோ?’’ என்பது ஈடு. இதனால் திருப்புலியூரில் நின்ற மாயப்பிரா னுடைய திருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று தோழி சொல்லித் தலைக்கட்டுகின்றாள். தோழியின் மதிநுட்பம் எல்லாம் புலப்படுமாறு அமைந்த இத்திருவாய் மொழியால் ஆழ்வாரின் ஆழ்ந்த தமிழ்ப்பண்பாடு தெள்ளி தின் விளங்குவதைக்கண்டு மகிழ்கின்றோம். அறத்தொடு நிற்கும் சந்தர்ப்பங்களையும் இலக்கண நூலார் விதந்து கூறியுள்ளனர். இறையனார் களவியலா சிரியர் இவற்றை, காப்பு கைமிக்குக் காமம் பெருகினும் நொதுமலர் வரையும் பருவம் ஆயினும் வரைவெதிர் கொள்ளாது தமரவர் மறுப்பினும் அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும் அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே' (காப்பு-இற்செறிப்பு: கைமிக்கு-அதிகமாகி; நொது மலர் - அயலார் எதிர்கொள்ளாது - ஏற்றுக்கொள்ளாது; தமர் - உறவினர்; மெய்ந்நாண் ஒரீஇ உடலின்கண் நின்ற நாண் நீங்கி) என்று தொகுத்துக் கூறுவர். தலைவியின் களவொழுக் கத்தைக் குறிப்பால் உணர்ந்த பெற்றோர்கள் அவளை இற்செறிக்கும்போதும், பிறர் தலைவியை மனம் பேச வருங்காலத்திலும், தலைமகனுடைய பெற்றோர் பரிசத் தோடு தலைவியை வரைவதற்கு வருங்கால் தலைவியின் பெற்றோர். பரிசம் குறைவு என்று கூறியோ பிறவாறோ மணத்தை மறுத்தபோதும், தலைவன் இரவுக் காலத்தில் 31. இறை. கள. 29.