பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் தலைவியை நாடிவருங்கால் அவனுக்கு யானை, முதலியவற்றால் துன்பம் நேரிடும் என்று எண்ண வருந்தும்போதும் தோழி அறத்தொடு தி بیبیمه நிற்கவே, ஏனையோரும் நிற்பர். இச்சந்தர்ப்பங்களைத் தவிர, வேறு சந்தர்ப்பங்களில் தோழி அறத்தொடு, ! பதில்லை. இதனைத் தொல்காப்பியர், அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப" என்று கூறுவர். அகத்திணை இலக்கியத்தில் தோழியின் பங்கு மிகப்பெரியது. வரம்பற்ற உரிமையையும் உடை யவள் அவள். தலைவியின் உரிமையையும் செங் லையும் தன்னுடையனவாகவே கொண்டு செயற்படும் -உறவினையுடையவள். எனினும், தலைவியின் இசைவின்றி. அறத்தொடு நிற்றல் மட்டும் தோழிக்குஇல்லை.இதனையே மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா அறிவிக்கின் றது. காரணம் என்ன? அறத்தொடு நிற்பதால் நானத் துக்கு இழுக்கு வரும். அந்த நாண் இழுக்குக்கு உரியவள் தலைவி. கற்பின்பொருட்டு நாணக் குறைவு வரினும் வருக என்று துணிய வேண்டியவள் அவள். அத் துணிவை அறிந்த பின்னரே தோழி அறத்தொடு நிற்றலை மேற் கொள்ள வேண்டும். நொதுமலர் வரைவும், வெறியாட் டெடுத்தலும் போன்ற அரிய பெரிய தொல்லைகள் நிகழும் காலமே அறத்தொடு நிற்றற்குரிய காலம் என்பது நச்சி னார்க்கினியரின் கருத்தாகும்." இந்தக் காலத்தன்றித் தலைவி நாணைத்துறந்து அறத்தொடு நிற்பதை விரும் பாள். கலித்தொகைத் தலைவி யொருத்தியின் கூற்று.இது: 'தலைவன் என் மெய்யைத் தடவித் தலையளி செய்தான். 32. தொல். பொருளியல்-11 (இளம்) 33. டிெ- 12(நச். உரை).