பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 43 டும் கழங்கும் இட்டு உரைத்துழி வேலனேடாதல் பிற ரோடாதல் தோழி உசாவுதல். ஏதீடு தலைப்பாடு என்பது, யாதானுமோர் ஏதுவை இடையிட்டுக்கொண்டு தலைப் பட்டமை கூறுதல். உண்மை செப்பும் கிளவியாவது, படைத்து மொழியாது பட்டாங்கு கூறுதல். அவ்வெழு வகைய' என்றதனால் உண்மை செப்புங்கால், ஏனைய ஆறு பொருளினுள் சில உடன் கூறி உண்மை செப்பலும், ஏனைய கூறுங்காலும் தனித்தனி கூறாது இரண்டும் மூன்றும் உடனே கூறுதலும் கொள்க' என்பர் நச்சி. னார்க்கினியர், அறத்தொடு நிற்றலை அகப்பொருள் நூல்கள் பலப்பல. வகையாகக் கூறும். இவ்வாறு அறத்தொடு கூறும் வகை களில் எல்லாம் இக்களவொழுக்க நிகழ்ச்சியினால் எவரும் எவரிடத்தும் குற்றம் காணா வகையாகத்தான் கூறப் பெறும். அறத்தொடு நிலைக் கூற்றுகள் தலைவியாலும் தோழியாலும் படைத்து மொழிவதான வெறும் பொய் மொழிகளாக இருக்கின்றமையின் அங்ங்னம் அவர்கள் பொய் புணர்த்துக்கூறுதல் அறத்தொடு பொருந்துமோ என வினவலாம். - பாலதாணையால் நடைபெற்ற இந் நிகழ்ச்சியினை நிகழ்ந்தவாறே வெளிப்படையாகக் கூறப் புகின், நற்றாய் முதலிய உறவினர் உண்மை அறியாமை யான் கூறுவாரையும் வெகுள் வராதலாலும், இஃது எவர்க்கும் தீங்கு பயவாத நிலையில் இருப்பதனால்: அதனை ஒளித்துரைத்தேனும் பாதுகாத்து நிற்பது நன்றே யாமாதலாலும் அவை உண்மையல்லாவிடினும் பொய்யு ரைகள் ஆகமாட்டா. காரணம், இதனால் பழியும் பாவமும் ஒருவருக்கும் ஏற்படுவதில்லை. பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின். (29.2) என்பது வள்ளுவம்.