பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அறத்தொடு நிற்றல் என்ற துறைபற்றி 51 பாடல் கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இத்துறை யின் கூறுபாடுகளையெல்லாம் நன்கு விளக்கும் முறையில் சில பாடல்கள் அமைந்துள்ளன. ஐந்திணைக் களவுத் துறைகளுள் இத்துறை முதற்பெருஞ் சிறப்புடையது. இதனாலன்றோ ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் மொழியின் தனிஇலக்கிய மதிப்பை அறிவுறுத்த விரும் பிய கபிலர் பெருமான் இத்துறையில் குறிஞ்சிப்பாட்டை” யாத்து வழங்கி அழியாப் புகழ்பெற்றார். வெறியாட்டு: களவின்வழியொழுகும் தலைவி யொருத் தியின் மேனி நாள்தோறும் மெலிந்து வருவதைச் செவிலித் தாய் (நற்றாய்) காண்கின்றாள். மரபு வழிப்பட்ட இத் தாய் உண்மையை ஊகித்தறியாமல் இவ்வேறுபாடு எற் றினானாயிற்று?’ என்று அறிவரை வினாவ, அவர்கள் குறி பார்த்தலால் தெய்வத்தினானாயிற்று என்று கூறினர். தாய் முருகனால் வந்ததுஎன்று நம்பி முருகனுக்குப்பூஜை யெடுக்கத் துணிகின்றாள். இதுவே தக்கவழி என்று அக்கம் பக்கத்து முதுப்பெண்டிரும் கூறுகின்றனர். வீட்டில் நல்ல தோர் இடத்தில் புதுமணல்பரப்பிய வெறியாடற்களத்தில் முருகபூசை தொடங்குகின்றது. முருகபூசை செய்விப்ப வன் வேலன் எனப்படுவான். இந்த வேலன் தலைவி முரு கேறப் பெற்றவள் என்று கூறுகின்றான். தலைவி யின் நோய்க்குப் பிறிதொரு காரணம் கற்பிக்கப் பெறு வதைத்தோழியால் பொறுக்கமுடிய வில்லை. அக்காரணம் தெய்வச் சாபத்தினால் ஆயிற்று என்று கூறிய வேலன் சொல்லுக்கு மதிப்பு தரவில்லை. தெய்வத்தையே சாடத் தொடங்குகின்றாள் தோழி. அருவி யின்னியத் தாடும் நாடன் மார்புதர வந்த படர்மலி அறுநோய் நின்னதைங் கன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி