பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 45 வேலன் கண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே." (இன்னியம் - இனிய வாச்சியம், படர்மலி-கருதுதலில்: அருநோய்- காமநோய் அணங்குதல்- வருந்தித் தரப்பெறு தல்; அண்ணாந்து - தலைநிமிர்ந்து, கடம்பின்கண்ணி. கடம்ப மலர்களாலான தலைமாலை; வெறிமனை- வெறிக் களம், மன்ற - திண்ணமாக; வாழிய - இத்தகைய இடங் களில் வாராது வாழ்வாயாக! இங்குக் கற்பு, தெய்வத்தையே எள்ளுகின்றது. தலைவி யின்நோய், காதல்நோய் தலைவனின் மார்புத்தழுவலால் ஏற்பட்டநோய். கடவுளாக இருக்கும் நீ இதனை அறிந் திருப்பாய். ஆயினும் மரபு அறிவு அன்றி மெய்யறிவில்லாத வேலன் அழைக்கத் தோன்றிய முருகா! என்சொல்வேன்? நீகடவுளாக இருப்பினும் உனக்குச் சொந்த புத்திஇல்லை. இத்தகைய இடங்கட்கு இனிவாராது வாழ்க’ என்கின்றாள் தோழி. இந்த வேலன் கழற்சிக்காயிட்டு நோய்க்குக் காரணம் கூறுவதும் உண்டு. இத்தகைய வழக்கம் உண்மையைத் தொல்காப்பியர், களம்பெறக் காட்டினும்: என்றும், கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டியதிறத்தால் செய்திக் கண்ணும்.” என்றும் கூறுவர், களமாவது, கட்டும் கழங்கும் இட்டுரைக் 36. நற்றிணை- 14. 37. ஐங்குறு-248. 38. தொல், களவியல்-23(அடி.39-நச்) 39. டிெ - டிெ - 24 அடி (3-4) - (நச்).