பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46- தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கும் இடமும் வெறியாட்டிடமும் என்று பொருள் கூறுவர் நச்சினார்க் கினியர். மேலும் இவர் கட்டினும் கழங்கினும்’ என்பதற்குக் கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினானும் கழங்கினானும் என்று பொருள் கூறுவர். இதனால் கட்டுவிச்சிக்குக் கட்டெடுத்தலும் வேலற்குக் கழங்குபார்த்தலும் முறையே உரியவை என்பது பெறப் படும். யார்நோய்க்கும் முருகெனமொழிதல் இவன் வாய் மரபாகும் 'அன்னைக்கு முருகென மொழியும் வேலன்' என்ற ஐங்குறு நூற்றுப் பாடலால் இஃது அறியப்படும். ஐங்குறுநூற்றுத் தோழியொருத்தி, கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்ற இவள் நோயே! என்று கூறுகின்றாள். காதல் நோயைக் கழற்சியால் அறி யப்புகுவது கற்புமேன்மைக்கே அவமானம் என்பது இவள் கருத்து. சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டு ஒன்றைக் காண்போம். அன்னையொருத்தி தன்மகளின் காதல் நோய் முருகனால் வந்தது என்று தவறாகக் கருதி வெறி யாட்டயர்கின்றாள். இதனைத் தலைவி தோழியிடம்கூறி அன்னையின் அறியாமைக்கும் வேலனின் அறியாமைக்கும் ஏன்? முருகக் கடவுளின் அறியாமைக்கும் கூட நகையாடு கின்றாள். இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள் மற்றன்னை அலர்கடம்பன் என்றே வெறியாடல் தான்விரும்பி வேலன் வரு கென்றாள்.82 40. ஐங்குறு - 249 41. டிெ - 245, 42. சிலப். குன்றக்குரவை - 11