பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 47. 1.கறி. மிளகுக்கொடி; சிலம்பன் - குறிஞ்சிநிலத்தலை வன்; நோய் - காமநோய், கடம்பன் - முருகன், வேலன்வேல்மகன்;. ஆய்வளை நல்வாய் இதுநகையா கின்றே மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்.* (ஆய்வளை- அழகிய வளை, வெற்பன்- மலைநாடன்; மடவன். அறிவிலி: குருகுபெயர்க்குன்றம்- கிரவுஞ்சமலை; கொன்றான். முருகன்; 'நோய் நாடி நோயின் முதல்நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்புரிதல்முறை. அன்னையோ இதனை யறியாது எதுபற்றி வெறியாடினும் இறுதியாக இது முருகன் குறை என்றே கூறும் வேலனை வெறியாடற் பொருட்டு அழைத்து வருமாறு பணித்தனள். இதனை நினைக்குந்தோறும் எனக்கு நகைப்பு உண்டாகின்றது.” என்கின்றாள் தலைவி. மேலும், அவள் மலை நாட னாகிய நம்பெருமான் அளித்த நோயைத் தீர்க்க வேலன் வந்தாலும் வருவான். அங்ங்ணம் வந்தால் அவன் அறிவி லியே. அவ்வேலன் அழைக்குங்கால் முருகன் வருமாயின் அவனைவிட அக்கடவுளும் அறிவிலியாவான். இஃது எனக்குச் சாலவும் நகைப்பினைத் தருகின்றது” என்கின் றாள். வெறியாடலை அறிவிக்கும் இந்த இரண்டு பாடல் களிலும் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலை அறிய 安鲇T廷、。 நம்மாழ்வார் திருவிருத்தத்தில்'வெறியாட்டு அமைந்த ஒரு பாடலைக் காட்டுவேன். தலைமகள் மேனி நாடோறும் மெலிவதைப்பார்த்து நற்றாய் (செவிலித்தாய்) மனம் கவல் 43. டிெ - டிெ 12. 44. நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற 100 பாசுரங்களைக் கொண்ட ஒருபிரபந்தம். அகத்துறை களாலானது,