பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கின்றாள். உண்மையின் காரணத்தை அவளால் அறிந்து கொள்ள இயலவில்லை. உடனே கட்டுவிச்சியைக் குறி கேட்க, அவள் தன் வழக்கப்படி ஆய்ந்து தலைவியின் மெலிவு முருகக்கடவுளால் வந்தது என்று குறி சொல்லு கின்றாள். உடனே வெறியாட்டாளனை அழைப்பித்து, முருகபூசை செய்யத் துணிகின்றாள் செவிலித்தாய். இதனைக் கண்ட தலைமகள் மிகவும் வருந்துவதைக் காண் கின்றாள்தோழி. உடனே அவள் வேலனையும் தாயரை யும்நோக்கிக் கண்டித்துச் சில கூறி வெறி விலக்கு வதாகச் சொல்வன இத்துறைப் பாசுரங்கள். திருவிருத் தத்தில் இத்துறை அமைந்த பாசுரம் இது: சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம், இந்நோய் இனதென்(று) இன்மொழி கேட்கும் இளத்தெய்வம் அன்றிதுவேல! நில் நீ என்மொழி கேண்மின்! என்.அம்மனை யீர்!உல கேழும் உண்டான் சொன்மொழி மாலையந் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே." (சின்மொழி. சிலபேச்சுகளே பேசவல்லவள்; கழிபெரு. மிகப்பெரிய இனது - இப்படிப்பட்டது; சொல்மொழி. திருநாமத்தைச் சொல்லுதல்) 'இந்த நங்கைக்கு இப்பொழுது நேர்ந்துள்ள நோயா னது இவர்கள் நினைக்கின்றபடி சிறு தெய்வமடியாக வந்ததன்று: மிகப்பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது' என்று வெறியாடும் வேலனை யும், தாய்மாரையும் நோக்கிக் கூறும் தோழி மீண்டும் 45, 565@g 26