பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 玺莎 வேலனை நோக்கி நீ விலகி நிற்பாயாக' என்று அவன் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பின்னர் அன்னை மாரைநோக்கி நீங்கள் இங்ங்னே கலங்குவது உசிதமன்று; உங்களைவிட யான் மிகச்சிறியளேயாயினும் இப்போது என் பேச்சைக் கேளுங்கள். இந்த விபரீதமுறைகளைக் கைவிட்டு உலகம் உண்ட பெருவாயனுடைய திருநாமங்களை இவள் செவிப்படுமாறு சொல்லுங்கள்; அவன் மாலையில் திகழும் திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து கொடுங்கள். இதுவே இவளுடைய நோய்க்கு ஏற்ற மருந்தாகும்' என்கின்றாள் தோழி. மறந்தும் புறம் தொழா மாந்தர்’ வழிவந்தவளாதலால் இளந்தெய்வ" வழிபாட்டை நீக்கிக் 'கழிபெருந் தெய்வத்தை வழிபடுமாறு கூறுவது எண்ணி மகிழத்தக்கது. இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் முறையில் அமைந்த வெறிவிலக்குப் பாசுரம். மணிவாசகப்பெருமானின் திருக்கோவையாரில் ஒரு பாடலைக் காட்டுவேன். தலைவியின் நோயைத் தவறா கப் புரிந்து கொண்டு செவிவி எடுக்கும் வெறியாட்டம் நிகழாவண்ணம் தடுக்க நினைத்து வேலனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். விதியுடை யார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங்குன்றினில் பாய்புனல் யாம்,ஒழுகக் கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுடை யார்தெய்வ மேஇல்லை கொல்இனி வையகத்தே' (விதியுடையார் - உரிமையுடையவர்கள்: வேரி - கள்: விலக்கலம் - விலக்கேம்; பதி - இடம்; கதி - இயக்கம்: கதிர்த்தோள் - ஒளியுடைய தோள், மதி - அறிவு) 46. திருக்கோவை - 292. த.இ.அ-4