பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இங்குத் தோழி வேலனை நோக்கி அட கடவுளே! தின் செயல் அழகிது. எம்பெருமாட்டியின் நோய்க்குக் காரணம் அன்றொருநாள் அவள் புனலில் மூழ்கியபோது அப்புன லினின்றும் அவளைக் கரையேற்றி அவளுக்கு உயிர் தந்து உதவினானே ஒரு வள்ளற் பெருமான், அவனுடைய ஒளி மிக்க தோள்களாகும். அங்ங்ணமிருக்க நீ வெறியாடுத லால் யாது பயன்? வெறியாடலால் நீங்கள் கள்ளுண்ண லாம். கள் உண்பாரை யான் தடுக்கிலேன். வேண்டும் அளவு உண்க. காரணம் காணாமல் நோய் தீர்க்க முயலும் உன் புத்தியே புத்தி. உன்னையன்றி என் அன்னைக்கு அறிஞர் பிறர் யாரும் கிடைத்திலர் போலும்’ என்று எள்ளி உரைக்கின்றாள். பேரன்பர்களே, பொதுவாக வெறியாட்டு அறத் தொடு நிற்கவும் வரைவு கடாவவும் பயன்படுவதைக் காணலாம். சமுதாயச் சடங்கிற்கும், கற்பொழுக்கத்திற்கும் ஒரு போராட்டம் நடைபெறுவதை வெறியாட்டில் கண்டு மகிழலாம். முதுமை வழிவழியாக வரும் மரபைக் கண் மூடித்தனமாகப் பின்பற்றுவதையும், உண்மையை அறிந்த இளமை முதுமையை எள்ளி நகையாடுவதையும் பொரு ளாக அமையும் நிலையில் வெறித்துறைப் பாடல்கள் திகழ்வதையும் காணலாம். எதிர்ப்புணர்ச்சிகள் புலவர் கள் கிளர்ச்சியுடன் பாடுவதற்குக் கவர்ச்சியுள்ள இடங் களாகும். சங்க இலக்கியத்தில் இத்துறைபற்றி 40பாடல் கள் காணப்படுகின்றன. காமக்கண்ணி (காமாட்சி) யார் என்ற பெண் புலவர் இத்துறை பற்றி மூன்று பாடல்களை யாத்துள்ளார். அன்னைக்கும் அருமை மகளுக்கும் இடையே எழும் ஒரு பூசலைப் பெண் புலவர் பாடுவது சிறப்பல்லவா? இங்கனம் ஒரு துறைபற்றி ஆழ்ந்து அழ குறப் பாடவல்ல புலமை பற்றி வெறி பாடிய காமக்கண்ணி யார் என்று இவர் சிறப்பினைப் பெற்றார் என அறிகின் 47. அகம் - 22, 98, நற். 268