பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி) தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை” என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு, நூலாக மலர்ந்தது கண்டு மகிழ்கிறேன். . - . . . . . . 'அறம்' என்ற தலைப்பில் கூறப்பட்ட பொருள்கள் மிகவும் சிறப்பானவை. தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள் முதலான இலக்கண இலக்கியநூல்களினின்றுமேற்கோள்கள் எடுத்துக் காட்டிய பாங்கு சிறப்பான ஒன்று. உறுதிப் பொருள்களில் அறம், பொருள் என்னும் இரண்டன் விளக்கம் அருமையானது. இன்பத்தைப்பற்றிக் கூறுங்கால் இன்பம் என்பது வெறும் பொருளை மட்டும் நுகரும் இன்பமாக இருப்பின் அதுவும் புறப்பொருள் என்றே வழங்கும். ஆனால் அகப்பொருள் என்று கூறப் பெதும் இன்பமாவது உயரறிவின் அன்பை துகரும் இன்ப மாதலின் அது தனியாக அகம்' என வழங்கலாயிற்று' து. 10, 11) என்ற விளக்கம் நன்று. - முழுமுதற் கடவுளைச் 'சிவம்’ என்று கூறி, அதனக் இயக்கத்தை, செயலை, செயலாற்றலை, அருளை 'அறம்' என்று கூறியிருப்பது (பக். 13) புதிய ஒன்று. சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழரது வாழ்க்கை யைப் படம்பிடித்துக் காட்டுவன என்று சில காலமாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவதை ஆசிரியர் நன்றாக மறுத்துள்ளார் (பக். 17, 18).