பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 51 றோம். விரிவஞ்சி அப்பாடல்களை நன்கு விளக்குவதைத் தவிர்க்கின்றேன். ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணையில் கபிலரால் :பாடப்பெற்ற பத்துப் பாடல்கள் வெறிப்பத்து' என்ற தலைப்பின் கீழ்க் காணப்பெறுகின்றன." இவை அன்னையின் அறியாமை, வேலனின் மடமை, தோழியின் எதிர்ப்பு முதலியவற்றைத் தொடர்பாக நமக்கு அறிவூட்டி நிற்பதை அறியலாம். எல்லாப் பாடல்களிலும் கற்பின் வென்றியே தலைதுாக்கி இலங்கக் கண்டு மகிழ்கின்றோம். தலைவியின் காதல் நோய்க்குத் தெய்வமூலம் கூறு வதாக அமைந்த வெறியாட்டைக் கற்புக்கு மாசாகச் சமூகம் கருதுவதில்லை. இந்நிலையில் தலைவியும் தாயர் வெறியாட்டு அயர்வதைப்பற்றி அத்துணையாகக் கவல் வதில்லை. இது நடைபெறாது தடுக்கத் தோழியும், தலைவியும் முன்னேற்பாட்டை மேற்கொள்வதும் உண்டு. நடந்தால் நடந்து ஒழியட்டும் என்று தடையின்றி அது நடந்தொழிய விட்டு விடுதலும் உண்டு. வெறியாட்டு என்பது அன்னை அறியாமையால் முதுவாய்ப்பெண்டிரின் யோசனையால் அரிநரைக் கூந்தல் செம்முதுச் செவிலிய ரால் நடைபெறும் ஒரு கேலிக் கூத்தேயாகும் என்பது தலைவியின் கருத்தாகும். தலைவியுடன் களவுக்கூட்டம் நேர்ந்த தலைமகன் அவளை மணந்து கொள்வதில் இருமுறைகள் உள்ளன. அவை களவு வெளிப்படுவதற்கு முன் வரைதல், களவு வெளிப்பட்ட பின் வரைதல் என்பனவாகும். வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்(று) ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே ' 48. ஐங்குறு. 241-250 49. தொல். களவியல் - 50 (இளம்)