பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்று விதி அமைத்துக் காட்டுவர் தொல்காப்பியர் தலைவி அறத்தொடு நின்றதை எல்லாரும் ஒப்புக்கொண்ட பின் மணந்து கொள்ளுதல் களவு வெளிப்பட வரைதல் ஆகும். தலைவியர் தோழிமார் இவர்கள் கூற்றாக வரும்: களவுப் பாடல்களைத்தொகுத்து ஆராய்ந்தால், உற்றார்க் கும் ஊரார்க்கும் களவை அறவே மறைத்து விரைவில், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அப்பெண்டிர்க்கு இருந்த நாணமும் கவலையும் நாட்டமும் புலப்படும். இம்மறைவு முயற்சியைத்தான் படாமை வரைதல் என்று. தொல்காப்பியம் வழங்கும். மரபு மணத்தை 'தமரிற். பெறுதல்' என்று கூறுவர் தொல்காப்பியர். களவை: முற்றிலும் மறைத்தோ அன்றிச் செவ்விதாக வெளிப்படுத் தியோ எவ்வாறேனும் பெற்றோரின் இசைவையும் வாழ்த். தையும் பெற்று மரபு மணம் கொள்ள வேண்டும் என்ற பெருவிழைவு அகத்திணைப் பெண்டிரிடம் காணப்பட்டது. என்பது அறியத் தக்கது. மேலும் தலைவியை ஒருவரும். அறியாமல் உடன் அழைத்துச் சென்று அவள் சுற்றத்தார் கொடுத்தலின்றியே மணம் செய்து கோடல் முற்காலத்தில் அறநெறியாகவே கருதப்பெற்றது. வாழ்வியல் ஆசான் தொல்காப்பியரும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. . என்று இதற்கு விதியும் செய்து பச்சை விளக்கு காட்டி யுள்ளார். ஆயினும், களவு வெளிப்பட்டபின் தலைவியின் தமர் உடன்பட்டுக் கொடுத்தலே முற்காலத்துப் பெரு, வழக்கமாக இருந்தது. 50. தொல், செய்யு - 179 51. தொல். களவியல் - 2 (இளம்)