பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 53 மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்' என்ற தொல்காப்பியரின் கூற்றால் இது தெளியப்படும். இது களவின் வழிவந்த மனமாகும். இவற்றால் தமிழ்ச் சமுதாயம் களவொழுக்கத்தை ஒப்பியது என்பதும், ஊக் கியது என்பதும், ஆயினும் தலைமைக் காதலே முதன் மைக் காதல் என்று தலைமையளிக்கவில்லை என்பதும், திருமணத்திற்குக் களவே வாயில் என்று ஒரேவழி சுட்ட வில்லை என்பதும் ஈண்டு எண்ணி உணர்தற்குரியவை. மேலும், களவுக்கும் கற்புக்குமுள்ள தொடர்பையும் இத் தகையச் செய்திகள் அறிவிக்கின்றன. கற்பு என்பது நல் வாழ்வு என்றும், களவு என்பது அகவாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் இவற்றால் அறிகின்றோம். மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர் காமம் களவிட்டுக் கைகொள் கற்புற்றென’’ (மறை-களவு: காமச்சிறப்புடைய களவு என்று நல்லந்துவனார் களவு,கற்பு இவற்றின்தொடர்பைப் புலப்படுத்துவர்.களவு கொண்டு விடுதற்குரியது. கற்பு கை கொள்ளுதற்குரியது என்று களவின் நிலையாமையையும், கற்பின்நிலையையும் உறவுபடுத்திக் காட்டி விளக்குவர். எனவே, கற்புவாழ்க்கைக்குக் களவு நல்ல தோற்றுவாயே யன்றி, இத்தோற்றுவாயின்றிக் கற்பியல் அமையாது என்று கோடல் தவறு. நல்லகாதல் வாழ்க்கை களவானே முகிழ்க் கும் என்பது பொருளன்று. எனவே, இறையனார் களவியல் 'கற்பெனப்படுவது களவின் வழித்தே' என்று விதி செய் திருப்பது அகக்திணைநெறியன்று என்பது அறியத்தக்கது. கற்பியலாம் இல்லறம் புகுவதற்கு இருநெறிகள் உள்ளன. ஒன்று களவுநெறி; இதுகாறும் இந்நெறியையே விளக்கினோம். மற்றொன்று மரபுநெறி. இதுவே தொல் 52. டிெ செய்யு - 179 (இளம்) 53. பரிபாடல்- 11.அடி 41-42 54. இறை. கள. 15.